பஸ் சேவைகள் நிறுத்தம்; கொழும்பு முடக்கம்?

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில், கொழும்பு கோட்டை மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து நெடுந்தூர பேருந்துச் சேவைகள் அனைத்தும் நிறுத்தப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் செயலாளர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக இன்று ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே இன்று இரவு முதல் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து முன்னெடுக்கப்படும் நெடுந்தூர சேவைகளை நிறுத்தத் தீர்மானித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். கொழும்பு கோட்டை, புறக்கோட்டை உள்ளிட்ட பிரதேசங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Read More

’20’ க்கு ஆதரவளித்த எதிரணியினர் இருவருக்கு இராஜாங்க அமைச்சர் பதவி? அரச தரப்பு ஆராய்கின்றது

சர்ச்சைக்குரிய அரசியலமைப்புக்கான 20 ஆவது திருத்தத்துக்கு ஆதரவளித்த எதிரணியைச் சேர்ந்த இருவருக்கு இராஜாங்க அமைச்சர் பதவிகள் வழங்கப்படலாம் என கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கொழும்பிலிருந்து வெளிவரும் சிங்களப் பத்திரிகை ஒன்றும் இன்று இதனை உறுதிப்படுத்தியிருக்கின்றது. 20 ஆவது திருத்தத்துக்கு எதிரணியைச் சேர்ந்த எட்டு உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்திருந்தனர். இதில், தமிழ், முஸ்லிம் எம்.பி.க்கள் ஏழு பேர் என்பது கவனிக்கத்தக்கது. இவர்களில் யார் யாருக்கு எவ்வாறான பதவிகளைக் கொடுப்பது என்பது குறித்தது அரசாங்கத்தின் உயர் மட்டத்தில் ஆராயப்பட்டுவருவதாகவும் கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.

Read More

4 ஆயிரத்தை கடந்த மினுவங்கொடை மற்றும் பேலியகொடை கொவிட் கொத்தணி

இலங்கையில் மேலும் 92 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த அனைவரும் பேலியகொடை மீன் சந்தை தொற்றாளர்களுடன் நெருங்கிப் பழகியவர்கள் என, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதற்கமைய இன்றைய தினத்தில் மாத்திரம் 368 கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர். அதன்படி, மினுவங்கொடை மற்றும் பேலியகொடை கொவிட் கொத்தணியில் இதுவரை பதிவான மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 4050 ஆக அதிகரித்துள்ளது

Read More

யாழில் தனிமைப்படுத்தப்பட்ட நபர் தப்பி ஓடியபோது ஊர் மக்களால் மடக்கி பிடிப்பு; பிடித்து கொடுத்த நபர்களும் தனிமைப்படுத்தப்பட்டனர்..!!

யாழ்ப்பாணம் தேசிய கல்வியல் கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்டவர்களில் ஒருவர் இன்று மாலை தப்பியோடிய நிலையில் அப்பகுதியை சேர்ந்த மக்களினால் மடக்கி பிடிக்கப்பட்டுள்ளார்.இதனால் தப்பியோடிய நபரை பிடித்த அனைவரையும் தனிமைப்படுத்தும் நடவடிக்கையை சுகாதார துறையினரும் பொலிசாரும் முன்னெடுத்துள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணம் தேசிய கல்வியல் கல்லூரியில் தென்னிலங்கையை சேர்ந்த பலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.இவ்வாறான நிலையில் அண்மையில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருநதது.அத்துடன் திடீர் சுகயீனம் காரணமாக மூவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தேசிய கல்வியல் கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களில் ஒருவர் இன்று மாலை அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.அவர் மது அருந்தும் நோக்கில் தப்பி சென்றதாகவும் அப்பகுதி மக்களினால் மடக்கி பிடிக்கப்பட்டுள்ளார்.எனினும் தப்பி ஓடிய நபரை மடக்கி பிடித்த ஊர் மக்கள் அவர்களுடன் தொடர்பினை பெநியவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கையில் சுகாதார துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

Read More

நாடாளுமன்றத்தில் பணியாற்றிய பொலிஸ் உத்தியோகத்தருக்கு கொரோனா..!!

நாடாளுமன்ற பொலிஸ் புலனாய்வுபிரிவை சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் பேலியகொட மீன்சந்தைக்கு சென்றவர் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்;ளனர். அவருடன் தொடர்பிலிருந்த 7 பேரை சுயதனிமைப்படுத்தலிற்கு உட்படுமாறு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். நாடாளுமன்றத்தின் பிரதான கட்டிடத்தில் பாதிக்கப்பட்ட பொலிஸ்உத்தியோகத்தர் பணிபுரியவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன

Read More

பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி வெளியாகவுள்ள “சீறும் புலி” திரைப்படம்

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி, சீறும் புலி என்ற பெயரில் தமிழ் திரைப்படம் ஒன்று உருவாக்கப்படுகிறது. தேசிய விருது வென்ற நடிகர் பொபி சிம்ஹா இந்த திரைப்படத்தில், வேலுப்பிள்ளை பிரபாகரனின் கதாப்பாத்திரத்தை ஏற்று நடிக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தை ஏற்கனவே நீலம் என்ற திரைப்படத்தை இயக்கி இருந்த ஜீ.வெங்கடேஷ்குமார் இயக்குகிறார். முன்னதாகவே அவர், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளைப் பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றை இரண்டு பாகங்களாக திரைப்பமாக உருவாக்குவதற்கு திட்டமிட்டிருப்பதாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More

சங்கிரி-லா ஹோட்டல் ஊழியருக்கு கொரோனா

கொழும்பு சங்கிரி லா ஹோட்டலின் பணியாளர் ஒருவர் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளார். ஹோட்டலின் ஊழியர் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளமை குறித்து நேற்று தகவல் கிடைத்தது என ஹோட்டலின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இலங்கையில் தற்போது உருவாகிவரும் நிலையில் எங்கள் விருந்தாளிகள் மற்றும் சகாக்களினது உடல்நலம் எங்களிற்கு மிகவும் முக்கியம்,இதன் காரணமாக நாங்கள் முன்கூட்டியே சோதனைகளை மேற்கொண்டோம் என சங்கிரி லா ஹோட்;டல் தெரிவித்துள்ளது. இந்த சோதனையின் போது ஹோட்டல் பணியாளர் ஒருவருக்கு கொரோன பாதிப்புள்ளமை உறுதியாகியுள்ளது, எனினும் அவரிடம் நோய்க்கான அறிகுறிகள் எவையும் தென்படவில்லை ஹோட்டல் நிர்வாகம் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட பணியாளர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என ஹோட்டல் நிர்வாகம் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட நபர் ஹோட்டலின் விருந்தாளிகளுடன் நேரடியாக தொடர்புபை பேணவில்லை என ஹோட்டல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Read More

கிழக்கில் 27 பேருக்கு ஒரே நாளில் கொரோனா; நிலைமை கவலைக்கிடம் – சுகாதாரப் பணிப்பாளர் எச்சரிக்கை..!!

கிழக்கு மாகாணத்தில் ஒரேநாளில் 27 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர். பேலியகொட சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் பலர் மறைந்துள்ளனர். பொதுமக்கள் இதுவிடயத்தில் உதவவேண்டும். இன்றேல் கிழக்கில் கொரோனா பரவுவதை தடுக்கமுடியாது போகலாம். இவ்வாறு கிழக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர் வைத்திகலாநிதி டாக்டர் அழகையா லதாகரன் எச்சரித்துள்ளார். அவர் மேலும் சமகாலநிலைமை தொடர்பில் தெரிவிக்கையில்: கிழக்கு மாகாணத்தில் திருமலை மாவட்டத்தில் 06பேரும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 11பேரும் கல்முனைப் பிராந்தியத்தில் 09பேரும் அம்பாறையில் ஒருவருடாக கொரோனாத் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். பேலியகொட மீன்சந்தை சம்பவத்தையடுத்து எமக்குகிடைத்த தகவலின்படி சந்தேகத்தில்பேரில் பலரை தேடிப்பிடித்து பிசிஆர் தனிமைப்படுத்தி பி.சி.ஆர் பரிசோதனை செய்தபோது இந்த 27பேர் தொற்றுக்குள்ளானது நிருபிக்கப்பட்டுள்ளது. கல்முனைப்பிராந்தியத்தில் கல்முனைக்குடியில் 3பேரும் நிந்தவூரில் 1பெண்மணியும் பொத்துவிலில் 5பேருமாக 9பேர் இனங்காணப்பட்டுள்ளனர். மட்டக்களப்பில் வாழைச்சேனை கோறளைப்பற்றில் 11பேரும் இனங்காணப்பட்டுள்ளனர். அம்பாறை நகரில் ஒருவர் இனங்காணப்பட்டுள்ளார். இவர் திவுலப்பிட்டியவில் நடந்த…

Read More

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் முக்கிய அறிவித்தல்

பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் எதிர் வரும் திங்கட்கிழமை வெளியாகும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நாட்டின் தற்போது, கொரோனா நிலைமை மற்றும் வெட்டுப்புள்ளி வெளியீடு தாமதமடைந்துள்ளதாக பல் கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித் துள்ளது.

Read More

இலங்கையில் 15ஆவது உயிரை பலியெடுத்த கொரோனா..!!

இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக 15 ஆவது உயிரிழப்பு பதிவாகியுள்ளது. குளியாப்பிட்டிய பகுதியை சேர்ந்த 56 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த நபர், கொரோனா தெற்றுக்குள்ளான நிலையில், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே, உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read More