ராகம வைத்தியாசாலையிலிருந்து தப்பியோடிய நபரின் படம் வெளியானது

கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளார் என்ற சந்தேகத்தின் பேரில் ராகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த வேளை தப்பியோடி நபரின் படத்தினை காவல்துறையினர் வெளியிட்டுள்ளதுடன் அவரை கைதுசெய்வதற்கான உதவியை நாடியுள்ளனர். பேலியகொடவை சேர்ந்த நபரே மருத்துவமனையிலிருந்து தப்பிச்சென்றுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Read More

தரகு பணத்திற்காக 6 கோடி பெறுமதியான தங்கம் கடத்திய இருவர் அனலைதீவில் கைது..!!

யாழ்ப்பாணத்தில் இருந்து இந்தியாவுக்கு சட்டத்திற்குப் புறம்பாக கடல் மார்க்கமாக பெருந்தொகையான தங்கத்தை கடத்த முற்பட்ட குற்றச்சாட்டில் இருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சுமார் 6 கோடியே 70 இலட்சம் ரூபாய் பெறுமதியான 5 கிலோ 500 கிராம் நிறையுடைய தங்கத்தை கடத்த முற்பட்ட போது சந்தேகநபர்கள் இருவரும் இன்று காலை அனலைதீவு கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை யினர் தெரிவித்தனர். மாதகல் பகுதியைச் சேர்ந்த இருவரும் தரகு பணத்துக்காக இந்தியாவிற்கு தங்கம் கடத்த முற்பட்டதாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் காங்கேசன்துறை கடற்படையினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரையும் யாழ்ப்பாணத்தில் உள்ள சுங்க திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மீட்கப்பட்ட தங்கத்தையும் சுங்க தினைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

Read More

தெல்லிப்பழையில் கூரிய ஆயுதங்கள் மீட்பு!!

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பகுதியில் இராணுவத்தினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பு தேடுதலில் வாள்வெட்டுகுலு பயன்படுத்தியதாக கூறப்படும் கூரிய ஆயுதங்கள் இராணுவத்தினரால் மீட்கப்பட்டுள்ளது. தெல்லிப்பழையில் இன்று காலை ராணுவத்தினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

Read More

யாழில் சங்கிலி அறுப்பில் ஈடுபட்டவர்கள் கைது; 9 சங்கிலிகள் மீட்பு

யாழ்ப்பாணத்தில் வீதியில் செல்லும் பெண்களிடம் தொடர் சங்கிலி அறுப்புக்களில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் இருவர் யாழ்.மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினரால் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து திருட்டுக்குப் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் ஒன்றும் ஒன்பது தங்கச்சங்கிலிகளும் இரண்டு கிராம் கெரோயின் போதைப்பொருளும் மீட்டுள்ளனதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது யாழ்ப்பாணத்தில் அண்மைய நாட்களாக வீதியில் பயணிக்கும் வயோதிபப் பெண்கள் இளம் பெண்களிடம் தங்கச் சங்கிலிகள் அபகரிக்கப்படுவதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் யாழ்.மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர் இந்நிலையில் யாழ்ப்பாணத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் இலக்கத்தகடுகளை வயர்களால் கட்டிய நிலையில் பயணித்த மோட்டார் சைக்கிளை பொலிஸார் மறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர் இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த சந்தேக நபர்களிடம்இருந்து தங்கச்சங்கிலி ஒன்றை மீட்டுள்ளதுடன் இரண்டுகிராம் கெரோயின் போதைப்பொருளையும் பொலிஸார் இன்று மீட்டுள்ளனர். குறித்த…

Read More

கொரோனா பாதித்த பென் மரணம்

இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8ஆக அதிகரித்துள்ளதென சுகாதார பிரிவினர் தெரிவிக்கின்றனர். 8ஆவதாக உயிரிழந்தவர் பெண்ணொருவர் என தெரிவிக்கப்படுகின்றது. ஹோமாகம ஆதார வைத்தியசாலையிலிருந்து குறித்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். குருநாகல் – பொல்பித்திகம பகுதியைச் சேர்ந்தவர் 72 வயதான பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்த பெண் கடற்படை சிப்பாய் ஒருவரின் நெருங்கிய உறவினர் என தெரிவிக்கப்படுவதுடன், குறித்த பெண்ணுக்கு கடற்படை சிப்பாயின் ஊடாகவே இந்த தொற்று ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்படுகின்றது. இந்த பெண் சிறுநீரக தொற்றினால் ஏற்கனவே பாதிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்த முதலாவது பெண்ணாக இவராவார். இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக இதற்கு முன்னர் உயிரிழந்த அனைவரும் ஆண்கள் என சுகாதார தரப்பு தகவல்கள் குறிப்பிடுகின்றன.

Read More

அரசியலமைப்புப் பேரவை நாளை அவசரமாக கூடவுள்ளது.

அரசியலமைப்புப் பேரவை நாளை காலை அவசரமாக கூடவுள்ளது. பாராளுமன்றம் கூடவேண்டுமென எதிர்க்கட்சி வலியுறுத்தி வரும் நிலையில் இந்தக் கூட்டம் நடக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

யாழ்ப்பாணத்தில் பஞ்சம் ஏற்படாமல் இருக்க இராணுவம் அபகரித்து வைத்துள்ள நிலங்களை விடுவிக்க வேண்டும்- சிவஞானம் வலியுறுத்து

இலங்கையில் அத்தியாவசிய பொருட்களுக்கான இறக்குமதிகள் தடைப்படும் என தெரிவித்துள்ள வடக்கு மாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம்  யாழ்ப்பாணத்தில் உணவுப் பஞ்சம் ஏற்படாமல் இருக்க இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள விவசாய நிலங்களை இராணுவம் விடுவிக்க வேண்டும்.இதற்கான முயற்சியை ஜனாதிபதி நியமித்துள்ள செயலணி முன்னெடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். யாழ்ப்பணத்தில் அவர் இன்று நடத்திய ஊடகவியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று காரணமாக முழு பிரதேசமும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளது.அதிலும் வடக்கு மாகாணத்தை பொறுத்தவரையில் யாழ்ப்பாணம் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட முடியாத கவலைக்கு உரிய மாவட்டமாக இருக்கின்றது. ஜனாதிபதியினால் இந்த நெருக்கடிக்குள் உள்ளாகியிருக்கும் மக்களின் பிரச்சனைகளை தீர்க்க செயலணி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.பொதுவாக ஓரளவு வசதி உள்ளவர்கள் தங்களின் தேவைகளை பூர்த்தி செய்யக் கூடும்.எனினும் அன்றாடம் தினக் கூலி செய்து வாழும் மக்கள்…

Read More

நல்லூர் பிரதேச சபை அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய 5.6 மில்லியன் ரூபாய் ஒத்துக்கீடு

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நல்லூர் பிரதேச சபை எல்லைக்குள் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய சபை நிதியில் இருந்து 5.6 மில்லியன் ரூபாய் பணம் ஒத்துக்கீடு செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி தேவைகளை செய்வதற்காக நல்லூர் பிரதேச சபையின் சிறப்பு அமர்வு சபையின் தவிசாளர் த.தியாகமூர்த்தி தலைமையில் இன்று நடைபெற்றது.இந்த அமர்விலேயே குறித்த தீர்மானம் எடுக்கப்படுள்ளது. நாட்டில் கொரோனா வைரஸ் தோற்று காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.வைரஸ் தொற்றுக் காரணமாக இதுவரை நாட்டில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பாதிப்படைந்துள்ளனர். இந்நிலையில் தொற்று பரவலை கட்டுப்படுத்த அரசு ஊரடங்கு சட்டத்தை கடுமையாக அமுல்ப்படுத்தியுள்ளது.இதனால் மக்களின் இயல்பு பாதிப்படைந்துள்ளது.அதிலும் அன்றாடம் தொழில் செய்து வாழ்பவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.யாழ்ப்பணத்தில் தாவடி பகுதியை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டு…

Read More