சீனா வேண்டாம்.. இந்தியா பக்கம் திரும்பும் ஆப்பிள் நிறுவனம்

சீனாவில் தனது ஐபோன்களை உற்பத்தி செய்து வந்த ஆப்பிள் நிறுவனம், தனது ஒட்டுமொத்த ஐபோன் உற்பத்தியில் ஐந்தில் ஒரு பகுதியை சீனாவிலிருந்து இந்தியாவுக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளது. கொரோனா பரவலுக்கு பிறகு, சீனாவிலிருந்து வெளியேற வெளிநாட்டு நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன. இந்நிலையில், கடந்த சில மாதங்களாக, ஆப்பிள் நிறுவன அதிகாரிகளுக்கும், இந்திய அரசு அதிகாரிகளுக்கும் இடையே தொடர்ந்து நடந்து வந்த பேச்சின் விளைவாக, ஆப்பிள் நிறுவனம், சீனாவிலிருந்து வெளியேறி, இந்தியாவில் தயாரிப்புகளை மேற்கொள்வது குறித்த ஆலோசனையில் இறங்கி உள்ளது. ஆப்பிள் நிறுவனம், அதன் உற்பத்தித் திறனில், கிட்டத்தட்ட ஐந்தில் ஒரு பகுதியை, சீனாவிலிருந்து, இந்தியாவுக்கு மாற்றுவதற்கான வாய்ப்புகள் குறித்து ஆலோசித்து வருகிறது. இது நடந்தால், ஆப்பிள் நிறுவனம் இந்தியாவின் மிகப்பெரிய ஏற்றுமதியாளாராக ஆகிவிடும். இந்தியாவில் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க, மத்திய அரசு சில சலுகைகளை அறிவித்துள்ளது. இச்சலுகைகளை…

Read More

2020 முழுவதும் வீட்டிலிருந்து பணியாற்ற கூகுள், பேஸ்புக் ஊழியர்களுக்கு அனுமதி

உலக அளவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, இன்று காலை நிலவரப்படி, 38.42 லட்சத்தை கடந்துள்ளது. அதில், 12.9 பேர் அமெரிக்கர்கள். பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை, 2.70 லட்சம் பேர் இறந்துள்ளனர். அதில், 76,537 பேர் அமெரிக்கர்கள் என, அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் தரவுகள் தெரியவிக்கின்றன. கொரோனா வைரஸ் தொற்றின் மையமாக மாறியுள்ள அமெரிக்காவில், வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், பல்வேறு நிறுவனங்களும் ஜூன் மாதம் வரை, தங்கள் ஊழியர்களை, வீடுகளில் இருந்து பணியாற்ற அனுமதித்தன. ஆனால் அங்கு கொரோனாவின் தாக்கம் குறையவில்லை. இதையடுத்து, பல்வேறு நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களை இந்த ஆண்டு முழுவதும் வீடுகளில் இருந்து பணியாற்றுமாறு அறிவுறுத்தியுள்ளன. குறிப்பாக, அமெரிக்காவின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களான, ‘கூகுள்’ மற்றும் ‘பேஸ்புக்’ இந்த ஆண்டு இறுதிவரை தங்கள் நிறுவன ஊழியர்களை வீட்டிலிருந்தபடி வேலை செய்ய…

Read More

ஆப்பிள் நிறுவனம் மீது பிரான்ஸ் குற்றச்சாட்டு!!

கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் தங்களை குறைவாக மதிப்பிட்டதுடன், கொரோனா தடமறியும் செயலிக்கு உதவி செய்ய மறுத்துவிட்டதாக ஆப்பிள் நிறுவனம் மீது பிரான்ஸ் குற்றம்சாட்டியுள்ளது. இந்தியாவின் ஆரோக்கிய சேது செயலி போன்று, பொருளாதாரத்தை மீண்டும் திறக்க திட்டமிட்டுள்ள நாடுகள், கொரோனா தொற்றை கட்டுப்படுத்த உதவும் கருவியாக கொரோனா தொற்று கண்டறியும் (Stopcovid) செயலியை உருவாக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்த செயலி, புளூடூத் வசதியை பயன்படுத்தி அருகில் உள்ள ஸ்மார்ட் போன்களுடன் இணைக்க உதவுகிறது. இதன் மூலம் கொரோனா பாதிக்கப்பட்ட நபர் குறித்து பயனர்கள் அறிந்து கொள்ள முடியும். ஆனால் ஆப்பிள் ஐபோன்களில் சாதாரணமாக புளுடூத் வசதி தடுக்கப்பட்டிருக்கும். பயனர் செயலியை பயன்படுத்தி தான் புளுடூத் வசதியை பயன்படுத்த முடியும். பிரான்ஸ் அதிகாரிகள், தங்களுடைய கொரோனா தடமறியும் செயலி பின்னணியில் செயல்படும் வகையில், எப்போதும் புளூடூத் செயல்பாட்டில்…

Read More

கொரோனா வைரஸ்: பயனர்களை கண்காணிக்கும் ஸ்மார்ட் வாட்ச்கள்-எப்படி சாத்தியமானது?

பல்கேரியா நாடு கொரோனா தொற்று சமயத்தில் மக்களைக் கண்காணிக்க ஸ்மார்ட் வாட்சுகளை பயன்படுத்தும் சோதனையை சமீபத்தில் மேற்கொண்டுள்ளது. சோஃபியாவில் வாழும் 50 பேருக்கு இந்த கருவி அளிக்கப்பட்டுள்ளது. அவர்களின் நடமாட்டம் ஜிபிஎஸ் மூலம் கண்காணிக்கப்பட்டுப் பதிவு செய்யப்பட்டு வருகிறது. பல நாடுகள் இது போன்ற கருவிகளைப் பயன்படுத்தி மக்கள் வீட்டில் இருக்கின்றனரா, ஊரடங்கு உத்தரவைக் கடைப்பிடிக்கின்றனரா எனக் கண்காணிக்கும் சோதனையை நடத்தி வருகின்றன. ஹாங்காங் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களைக் கண்காணிப்பதற்காக மின்சாதனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. பல்கேரியாவில் நடத்தப்படும் இந்த சோதனையில் போலாந்தில் தயாரிக்கப்பட்ட கோமார்ச் ஸ்மார்ட்வாட்ச்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த கை கடிகாரங்கள் ஒருவர் வீட்டில் இருக்கிறாரா என்பதைக் கண்காணிப்பதுடன் அணிந்திருப்பவரின் இதயத்துடிப்பைக் கணக்கிடுவது மற்றும் அவசர எண்ணுக்கு அழைக்கும் வசதி ஆகியவையும் கொண்டுள்ளது. தென் கொரியாவில் தனிமைப்படுத்தலை மீறுபவர்கள் இந்த கை கடிகாரங்கள் மூலம்…

Read More

பேஸ்புக்கில் இனி 50 பேர் வரை வீடியோ சாட் செய்யலாம்

ஜூம் செயலிக்கு போட்டியாக, காலவரை எதுவுமின்றி 50 பேர் வரை வீடியோ அழைப்பில் உரையாட கூடிய வகையில், ‛மெசஞ்சர் ரூம்ஸ்’ என்ற புதிய வசதியை பேஸ்புக் அறிமுகம் செய்துள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டிற்குள் முடங்கியுள்ள மக்கள் கடந்த 2 மாதங்களாக அதிகளவில் ஜூம், ஸ்கைப் போன்ற வீடியோ அழைப்பு செயலியை பயன்படுத்தி வந்தனர். ஆனால் ஜூம் செயலியில் பயனர்களின் பாதுகாப்பு மற்றும் தனிப்பட்ட தகவல்கள் திருடப்படுவதாக புகார் எழுந்ததால் கூகுள் உள்பட பல்வேறு நிறுவனங்கள் ஜூம் செயலியை பயன்படுத்த தடை விதித்திருந்தன. இந்நிலையில், ஜூம் செயலிக்கு மாற்றாக பேஸ்புக் தனது புதிய மெசஞ்சர் ரூம்ஸ் வசதியை அறிமுகம் செய்துள்ளது. எப்போது பயன்பாட்டுக்கு வருகிறது ? பேஸ்புக் பயனர்கள் பேஸ்புக் அல்லது மெசஞ்சர் ஆப் மூலம் யாரை வேண்டுமானாலும் 50 பேர் வரை வீடியோ அழைப்பில் இணைத்து…

Read More