மாதகல் கடலில் 93 கிலோ கஞ்சா மீட்பு..!!

யாழ்.மாதகல் கடலில் மறைத்து வைக்கப்பட்ட 93 கிலோ கஞ்சா கடற்படையினரால் இன்று தினம் சனிக்கிழமை மாலை பிடிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, மாதகல் கடற்பரப்பில் ஏற்கெனவே கொண்டுவரப்பட்டு நங்கூரத்தில் கடலில் இறக்கப்பட்டு மறைத்து வைக்கப்பட்ட கஞ்சாவே மீட்கபபட்டுள்ளதாக அறியக் கிடைக்கிறது.சம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படாத நிலையில் கடற்படையினரும் பொலிசாரும் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

கொழும்பில் மேலும் 15 பேருக்கு டெல்டா வைரஸ் தொற்று..!!

இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்டு மிக வேகமாக பரவக்கூடிய டெல்டா வகை கொரோனா வைரஸ் கொழும்பு தெமட்டகொடை கண்டறியப்பட்டிருந்தது. இந்நிலையில், குறித்த பகுதியில் மேலும் 15 பேருக்கு டெல்டா வகை கொரோனா தொற்றுதி செய்யப்பட்டுள்ளது. தெமட்டகொடை, அராமயா வீதியை சேர்ந்த 129 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையிலேயே 15 பேருக்கு டெல்டா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Read More

முல்லைத்தீவில் தனியார் காணியில் இருந்து வெடிபொருட்கள் மீட்பு..!!

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆனந்தபுரம் 5ஆம் வட்டாரத்தில் தனியார் காணி ஒன்றில் அபாயகரமான வெடிபொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த காணியின் உரிமையாளர் அப்பகுதியை விவசாய நடவடிக்கைக்காக துப்பரவு செய்த போதே வெடிபொருட்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. 5 அங்குல எறிகணை ஒன்றும் கிபிர் விமானக்குண்டு ஒன்றும் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், மேலும் வெடிபொருட்கள் அந்த காணியில் புதைந்திருக்கலாம் என்று சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் குறித்த வெடிபொருட்களை அங்கிருந்து மீட்பதற்கு நடவடிக்கை எடுத்துவருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Read More

டெல்டா வைரஸ் நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் பரவும் அபாயம் உள்ளது – பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர்

நடமாட்ட கட்டுப்பாட்டு தளர்வுக்கு பின்னர் மக்களை மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன கோரிக்கை விடுத்துள்ளார். கொழும்பு தெமடகொட பகுதியில் அடையாளம் காணப்பட்ட டெல்டா வைரஸ் திரிபு நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் பரவும் அச்சுறுத்தல் காணப்படுகின்றது. இந்த வைரஸ் திரிபு அடையாளம் காணப்பட்ட பகுதி சனநெரிசல் அதிகம் உள்ள பகுதியாகும். அங்குள்ளவர்களில் அதிகமானோர் சுத்திகரிப்பு பணியாளர்களாக இருக்கின்றனர். இந்நிலையில் இந்த வைரஸ் திரிபு நாட்டின் ஏனையப் பகுதிகளுக்கும் பரவக்கூடிய அச்சுறுத்தல் காணப்படுகிறது. குறிப்பாக மேல் மாகாண மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Read More

வடக்கிற்கு மாத இறுதியில் கொவிட் தடுப்பூசி வழங்கப்படும் – ஐனாதிபதி

வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம் தவிர்ந்த, கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா ஆகிய 4 மாவட்டங்களுக்கும் இந்த மாத இறுதியில் கொரோனாத் தடுப்பூசி வழங்கப்படலாம் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு ‘சினோபார்ம்’ தடுப்பூசியின் முதலாவது டோஸ் ஏற்றியவர்களுக்கு இரண்டாவது டோஸ் ஏற்றப்படும்போது ஏனைய 4 மாவட்டங்களுக்கும் முதலாம் கட்டத் தடுப்பூசிகள் வழங்கக் கூடியதாக இருக்கும் என்று ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும், இலங்கையிலுள்ள 9 மாகாணங்களின் சுகாதார சேவைகள் பணிப்பாளர்களுக்கும் இடையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். தென்னிலங்கையைச் சேர்ந்த சுகாதாரப் பணிப்பாளர்கள், கொரோனாத் தடுப்பூசி ஏற்றல் நடவடிக்கையில் அதிகரித்த அரசியல் தலையீடு காணப்படுகின்றது என்று இந்தச் சந்திப்பில் சுட்டிக்காட்டியுள்ளனர். மேலும், தடுப்பூசி ஏற்றலுக்கான முன்னுரிமையை அடிக்கடி மாற்ற வேண்டாம் என்றும் அவர்கள் கோரியுள்ளனர். யாழ்ப்பாணம் மாவட்டத்தில்…

Read More

50 கிலோ ஹெரோயினுடன் பொலிஸ் உத்தியோகத்தர் கைது..!!

ஹெரோயின் போதைப் பொருளுடன் களுத்துறை தெற்கு உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த உப பொலிஸ் பரிசோதகர் சீருடையில் இருந்தபோது ஹெரோயின் போதைப் பொருளுடன் ஹிக்கடுவ பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட உப பொலிஸ் பரிசோதகரிடம் இருந்து 50 கிலோ கிராம் ஹெரோயின் கண்டு பிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Read More

போலி ஆவணங்களை சமர்ப்பித்து பிரான்ஸ் செல்ல முயன்ற முல்லைத்தீவை சேர்ந்த இளம் யுவதி கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது..!!

மோசடியான ஆவணங்களை சமர்ப்பித்து பிரான்ஸ் செல்ல முயன்ற இளம் யுவதி ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார் இவர் சமர்பித்த அறிக்கையும் போலியானது என்பது தெரியவந்துள்ளது. முல்லைத்தீவு மாங்குளத்தில் சேர்ந்த 25 வயதான யுவதி ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். என்று 3:45 மணிக்கு கத்தார் ஏர்வேஸ் விமானம் கியூ ஆர் -669 விமானத்தில் கத்தார் வழியாக பிரான்ஸ் பயணிக்க கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்றிருந்தார். அவர் வழங்கிய பிரான்ஸ் கடவுச்சீட்டு உள்ளிட்ட ஆவணங்களில் சந்தேகம் ஏற்பட்டதால் அவர் விமான நிலையத்தில் குடிவரவு மற்றும் குடிவரவு துறை கண்காணிப்பு பிரிவில் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். இதை அடுத்து அவரது பிரான்ஸ் கடவுச்சீட்டு உள்ளிட்ட ஆவணங்களை ஆய்வு செய்தனர். தொழில்நுட்ப ஆய்வுகளில் அவர் சமர்ப்பித்த பிரான்ஸ் கடவுச்சீட்டு மோசடியானது என்று கண்டறியப்பட்டது அது போலியான முறையில் முத்திரைகளுடன் பொறிக்கப்பட்டிருந்தன. பின்னர்…

Read More

உலகை மிரட்டும் ‘ டெல்டா’ திரிபு கொரோனா வைரஸ்; உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை..!!

இந்தியாவில் முதன்முதலாக அடையாளம் காணப்பட்ட ´டெல்டா´ திரிபு கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் ஆதிக்கம் செலுத்தும் வைரஸாக மாறி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைமை விஞ்ஞானி இதனை தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன

Read More

யாழில் அபாயம் நீங்கவில்லை; மக்கள் அவதானமாக செயற்பட வேண்டும் – மாவட்ட செயலர்

யாழ் மாவட்டத்தை அவதானிக்கும் போது இன்னும் அபாயமான கட்டம் நீங்க வில்லை. எனவே பொதுமக்கள் அவதானமாக செயற்பட வேண்டுமென அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார். இன்றைய தினம் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அரசாங்க அதிபர் இதனைத் தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில், அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட 5,000 ரூபா கொடுப்பனவு முதற்கட்டமாக 71,712 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.இதன் பிரகாரம் முதற் கட்டமாக சமுர்த்தி பெறுவோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள், சிறுநீரக கொடுப்பனவு பெறுவோர், முதியோர் கொடுப்பனவுகள் பெறுவோருக்கே வழங்கப்பட்டுள்ளன. ஏனையோருக்கும் விரைவில் வழங்குவதற்கு எதிர்பார்க்கிறோம்.சமுர்த்தி பெறாதவர்களுக்கான 5,000 ரூபா கொடுப்பனவுக்கான நிதி வந்தடைந்ததும் ஏனையோருக்கும் வழங்கப்படும்.கொரோனா நிலைமையை அவதானிக்கும் போது நேற்றைய தினம் மாத்திரம் 83 கொரோனா தொற்றாளர்கள் யாழில் கண்டறியப்பட்டுள்ளனர். 1,754 குடும்பங்களைச் சேர்ந்த 5,613 நபர்கள் சுய தனிமைப்படுத்தலில் உள்ளனர். யாழில் தொற்று உறுதி…

Read More

சாவகச்சேரியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி கூடம் சுற்றிவளைப்பு; 150 லிட்டர் கோடா,35 லிட்டர் கசிப்புடன் ஒருவர் கைது..!!

சாவகச்சேரி,சரசாலை,குருவிக்காடுப் பகுதிக்குள் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வந்த குழுவை மடக்கியது மதுவரித் திணைக்களம். இதன் போது 150,000 ml கோடா மற்றும் 35,000 ml கசிப்பு அடங்கலாக கசிப்பு உற்பத்திக்கான உபகரணங்களையும் கைப்பற்றியுள்ளதுடன் சந்தேகநபர் ஒருவரையும் கைதுசெய்துள்ளனர். தற்போது நடைமுறையில் உள்ள பயணத் தடை காலத்தில், மதுபான விற்பனை தடைசெய்யப்பட்டுள்ள நிலையில், சட்டவிரோத கசிப்பு உற்பத்தியில் பல நாட்களாக ஈடுபட்டு வந்துள்ளமை சாவகச்சேரி மதுவரித் திணைக்களத்தினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதற்கமைய உதவி மது வரி ஆணையாளர் க.தர்மசீலன் அவர்களது அறிவுறுத்தலுக்கு அமைய, மது வரி அத்தியட்சகர் ரி.தங்கராசா, சாவகச்சேரி மதுவரி அதிகாரி த.அசோகரத்தினம் ஆகியோரின் வழி நடத்தலில் குறித்த சுற்றிவளைப்பை சாவகச்சேரி மது வரி திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டனர். சந்தேகநபரையும் சான்றுப் பொருட்களையும் சாவகச்சேரி நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Read More