எம்.சி.சி ஒப்பந்தத்தில் இலங்கை கைச்சாத்திட்டால் அரசிலிருந்து விலகுவேன் – விமல் வீரவன்ச

அமெரிக்காவுடனான எம்.சி.சி ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுகிற எந்த அரசாங்கத்திலும் தாம் இருக்கப்போவதில்லை என்று ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் உள்ள முக்கிய பங்காளிக் கட்சிகளில் ஒன்றாகிய தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைக் கூறினார். தொடர்ந்தும் இதில் பேசிய அமைச்சர் வீரவன்ச, அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோவின் இலங்கை விஜயத்தின்போது எம்.சி.சி ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவில்லை என்று கூறினார். அதனால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மீது தமக்கு அதீத நம்பிக்கை இருப்பதாகவும், ஆகவேதான் பொம்பியோவின் இலங்கை விஜயத்தை தாம் முன்புபோல எதிர்க்கவில்லை எனவும் குறிப்பிட்டார்.

Read More

கொரோனா சந்தேகத்தில் மருத்துவமனையிலிருந்து தப்பிச்சென்ற ஜோடி; வீட்டில் வைத்து மடக்கி பிடிக்கப்பட்டனர்..!!

கொரோனா வைரஸ் சந்தேகத்தில் இரத்தினபுரி – இறக்குவான வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட தம்பதியினர் நேற்று தப்பியோடிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். கஹவத்த – வெல்லந்தர பகுதியைச் சேர்ந்த பெண் கொரோனா வைரஸ் சந்தேகத்தில் கடந்த 27ஆம் திகதி கஹவத்த தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் அவருடைய கணவரும் அங்கேயே அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவர்கள் இறக்குவான வைத்தியசாலைக்கு மேலதிக பரிசோதனைகளுக்காக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனிடையே வைத்தியசாலை நிர்வாகத்திற்கு தகவல் கூறாமல் இவ்விருவரும் தப்பிச்சென்று அட்டகலன்பன்ன பனாவல பகுதியிலுள்ள தங்களது வீட்டிற்கு சென்றுள்ளனர். இதனையடுத்து சுகாதார அதிகாரிகள் மற்றும் பொலிஸார் இணைந்து இவர்கள் குறித்த தகவல்களை திரட்டியதோடு அவர்களையும் கண்டுபிடித்து அவர்களுடைய வீட்டிலேயே தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

Read More

புத்தளத்தில் தனிமைப்படுத்தலில் இருந்த பெண் மரணம் – கொரோனா என சந்தேகம்..!!

புத்தளம் – முந்தல் பிரதேசத்தில் வீட்டில் தனிமைப்படுத்தலில் இருந்த வயோதிபப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவரது உடல் நேற்று மாலை தகனம் செய்யப்பட்டுள்ளது. 76 வயதுடைய குறித்த பெண், தனது வீட்டில் இதர அங்கத்தவர்களுடன் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருந்தார். முதலில் செய்யப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் அவருக்கு தொற்று இருக்கவில்லை. எனினும் அந்த வீட்டிலிருந்த ஏனையவர்களின் பரிசோதனை முடிவுகள் வெளிவரவுள்ள நிலையிலேயே குறித்த பெண் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

சந்தை வியாபாரிகள் போராட்டம்..!!

மருதனார்மடம் சந்தை வியாபாரிகள் தற்காலிக பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர் புதிதாக அமைக்கப்பட்ட சந்தைத் தொகுதியில் ஏற்கனவே தமக்கு வழங்கப்படும் சொல்லப்பட்ட இட ஒதுக்கீடு வழங்கப்படாத காரணத்தினால் அதனை தீர்த்து வைக்குமாறு என்று தற்காலிக பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்இ ன்று காலை மறுநாள் மாட்டு சந்தை பகுதிக்கு வந்த சுன்னாகம் பொலிசார் மற்றும் ராணுவத்தினர் சந்தை வியாபாரிகள் அழைத்து வலி தெற்கு பிரதேச சபை தலைவரோடு பேச்சுவார்த்தை மேற்கொள்ள முனைந்தனர் இன்று காலை 10 மணி அளவில் அனைத்து கட்சி உறுப்பினர்களும் ஒன்றுகூடி ஒரு முடிவை அறிவிப்பதாக சுன்னாகம் பிரதேச சபை என்னுடைய தவிசாளர் தர்ஷன் தெரிவித்துள்ளார்

Read More

அரசாங்க தகவல் திணைக்களத்தின் ஊழியர் ஒருவருக்கும் கொரோனா தொற்று..!!

அரசாங்க தகவல் திணைக்களத்தின் ஊழியர் ஒருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. குறித்த நபர் கடந்த 16ம் திகதி பேலியகொட மீன் சந்தைக்கு சென்றிருந்தார் என கூறப்படுகிறது. இதனையடுத்து 40 பேர் வரை தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

Read More

மூன்று மாதக் குழந்தைக்கும் கொரோனா தொற்று..!!

மத்துகம – வலல்லாவிட்ட பிரதேசத்தில் 03 மாதக் குழந்தைக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வலல்லாவிட்ட நிர்வாக பொதுசுகாதார அதிகாரி திலகரத்ன அத்துகோரள இதனைத் தெரிவித்தார். வலல்லாவிட்ட மாகலந்தாவ பிரதேசத்தைச் சேர்ந்த குழந்தைக்கே இவ்வாறு தொற்று ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தற்சமயம் குறித்த குழந்தையும், ஏற்கனவே தொற்று உறுதிசெய்யப்பட்ட குழந்தையின் தாயும் கொழும்பு ஐ.டி.எச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை வலல்லாவிட்ட பிரதேசம் முடக்கப்பட்டிருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

Read More

மேலும் 211 பேருக்கு கொரோனா தொற்று

நாட்டில் மேலும் 211 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்தார்.

Read More

ஹிஸ்புல்லாவின் பல்கலைக்கழகம் கொரோனா மருத்துவ விடுதியாக மாற்றம்..!!

மட்டக்களப்பு ஷரியா பல்கலைக்கழகம் என கூறப்படும் முன்னாள் எம்.பி ஹிஸ்புல்லாவின் பல்கலைக்கழகம் கொரோனா நோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்கும் நிலையமாக மாற்றப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆலோசனை பேரில் இந்த நடவடிக்கை இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக பொலன்னறுவை வைத்தியசாலை பணிப்பாளர் மருத்துவர் சம்பத் இந்திக்க குமார தெரிவித்தார். இதன்படி ஷரியா பல்கலைக்கழகத்தில் சுமார் 1200 நோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வசதிகள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Read More

இரண்டு வருடத்தின் பின்னர் யாழ் மாநகர சபை அமர்வில் நாளை கலந்துகொள்கிறார் மணிவண்ணன்

இரண்டு வருட இடைவெளியின் பின்னர் யாழ் மாநகரசபை அமர்வில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் உறுப்பினர் வி.மணிவண்ணன் கலந்து கொள்ளவுள்ளார். மணிவண்ணனை கட்சியிலிருந்து நீக்கும் அகில இலங்கை தமிழ் காங்கிரசின் முடிவிற்கு எதிராக சட்டத்தரணி வி.மணிவண்ணன் தாக்கல் செய்த மனு மீதான கட்டளையை யாழ் மாவட்ட நீதிமன்றம் இன்று வழங்கியது. மணிவண்ணனை கட்சியிலிருந்து நீக்கும் முடிவிற்கு இடைக்கால தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. மணிவண்ணனை கட்சி உறுப்புரிமையிலிருந்து நீக்குவதாக தெரிவத்தாட்சி அலுவலருக்கு, தமிழ் காங்கிரஸ் கடிதம் எழுதியிருந்தது. அதனடிப்படையில் அவரது உள்ளூராட்சி உறுப்புரிமை வறிதாவதாக, தெரிவத்தாட்சி அலுவலகர் அறிவித்திருந்தார். தற்போது, மணிவண்ணனை கட்சியிலிருந்து நீக்கும் முடிவை நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளதால், தெரிவித்தாட்சி அலுவலரின் கடிதமும் வலுவற்றதாகியது. இதேவேளை, யாழ் மாநகரசபை உறுப்புரிமையிலிருந்து மணிவண்ணனை நீக்க வேண்டுமென கடந்த வருடம், எம்.ஏ.சுமந்திரன் தரப்பின் பின்னணியில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.…

Read More

சீனாவால் இலங்கையின் இறையாண்மைக்கு பாதிப்பு – அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ குற்றச்சாட்டு

சீனாவால் இலங்கையின் இறையாண்மைக்கு பாதிப்பு என அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ குற்றஞ்சாட்டியுள்ளார். சீனாவே இலங்கையின் இறையாண்மையை மீறும் வகையில் நிலம் மற்றும் கடல் சார்ந்த பகுதிகளை ஆக்கிரமிப்பதற்காக மோசமான ஒப்பந்தங்களை சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சி கொண்டுவந்துள்ளது. ஆனால் அமெரிக்கா உறவுகளை வலுப்படுத்தவும் இரு நாடுகளுக்கிடையிலான நட்புறவினை வளர்க்கவும் அபிவிருத்தி குறித்த நோக்குடனும் செயற்படுகின்றது.” – என்றும் அவர் கூறினார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவை சந்தித்த பின்னர் வெளிவிவகார அமைச்சில் இன்று நடைபெற்ற கூட்டு ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குற்றஞ்சாட்டினார். அதேவேளை, இங்கு கருத்து வெளியிட்ட இலங்கை வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன, இலங்கை நடுநிலையாக செயற்படும் ஒரு நாடு என்பதனால் அமெரிக்கா உட்பட அனைத்து நட்பு நாடுகளுடனும் ஒத்துழைப்புடன் செயற்படும். என்றார்.

Read More