ஆப்கான் வெள்ளத்தினால் 100 பேர் பலி; 500 வீடுகள் நிர்மூலம்

ஆப்கானிஸ்தானின் வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களில் ஏற்பட்ட பாரிய வெள்ளப்பெருக்கினால் குறைந்தபட்சம் 100 பேர் உயிரிழந்துள்ளனர் என பர்வான் மாகாண அதிகாரிகள் தெரிவித்துள்ளனர், பர்வான் (Parwan) மாகாணத்தின் தலைநகரான சரிக்கார் நகரின் பெரும்பகுதிகள் வெள்ளப்பெருக்கினால் கடுமையாக சேதமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். முற்றாக வீடுகள் சேதமடைந்துள்ள பகுதிகளில் புதையுண்டுள்ள மக்களை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவரும் நிலையில் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாம் என பர்வான் மாகாண பேச்சாளர் வாஹிதா ஷக்கார் அச்சம் வெளியிட்டார். இந்த சம்பவத்தினால் ஏற்படும் பாதிப்புகளைக் கட்டுப்படுத்துவதும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவுவதும் உள்ளூர் அரசின் திறனுக்கு அப்பாற்பட்டது என்பதால் மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும் என ஷக்கார் தெரிவித்தார். நேற்றுமுன்தினம் இரவு பெய்த கடும் மழையால் சரிக்கார் நகரில் ஏராளமான சிறுவர்கள் பலியாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை,…

Read More

யாழில் திருமணம் செய்வதாக பெண்களை ஏமாற்றி நகைகளை மோசடி செய்தவர் கைது!!

பெண்களைத் திருமணம் செய்வதாகக் கூறி காதலித்து ஏமாற்றி நகைகளை மோசடி செய்து வந்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் யாழ்ப்பாணம் பொலிஸாரால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் யாழ். நாவாந்துறையைச் சேர்ந்த 38 வயதுடைய நபர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபரிடம் இருந்து 15 பவண் தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளன. சந்தேகநபர் தன்னிடம் இருந்து 45 பவுண் நகைகளைப் பெற்றுக்கொண்டு ஏமாற்றிவிட்டார் என்று வட்டுக்கோட்டையைச் சேர்ந்த பெண் ஒருவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார். தன்னைக் காதலிக்கிறார் என்று கூறிப் பழகிய சந்தேகநபர் திருமணம் செய்துகொள்வார் என்று உறுதியளித்திருந்தார் என்றும் முறைப்பாட்டாளரான பெண் தெரிவித்துள்ளார். திருமணம் செய்வார் என்கிற நம்பிக்கையில் அவர் கேட்டபோதெல்லாம் தனது தங்கச் சங்கிலி, மோதிரம், தோடு, அம்மாவின் தாலி என்பவற்றை தான் வழங்கினார் என்றும் அதன் பெறுமதி 45 பவுண் என்றும் முறைப்பாட்டில் அந்தப் பெண் தெரிவித்திருக்கிறார்.…

Read More

இந்தியாவும் சீனாவும் பிரச்னைகளை பேசி தீர்க்கும்: ரஷ்யா நம்பிக்கை

‘இந்தியாவும், சீனாவும், எல்லைப் பிரச்னைகளை பேசி தீர்த்துக் கொள்ளும்’ என, ரஷ்யா நம்பிக்கை தெரிவித்துஉள்ளது. ரஷ்ய அதிபரின் செய்தி தொடர்பாளர், டிமிட்ரி பேஸ்கோவ் கூறியதாவது:இந்திய – சீன எல்லையில் நிலவும் நிலைமையை, தீவிரமாக கண்காணித்து வருகிறோம். நிலைமை மிகவும் பதற்றமாக உள்ளன.ஆனால், இரு நாடுகளும், எல்லையில் பதற்றத்தை குறைத்து, அமைதியை ஏற்படுத்தும் என, நம்புகிறோம். இந்திய – சீன எல்லையில் அமைதி நிலவுவது, இரு நாடுகளுக்கு மட்டுமின்றி, கிழக்காசிய பகுதிக்கே நல்லதாக அமையும். இந்தியாவும், சீனாவும், ரஷ்யாவின் நெருங்கிய நட்பு நாடுகள்.இரு நாடுகள் நலனிலும், ரஷ்யா அக்கறை கொண்டுள்ளது. இருநாடுகளும், பதற்றத்தை குறைக்க முயற்சித்து வருவதை, ரஷ்யா வரவேற்கிறது. இவ்வாறு, அவர் கூறினார்.

Read More

ரஷ்யாவில் கொரோனா பாதிப்பு 5 லட்சத்தை கடந்தது!!

ரஷ்யாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 5,02,436 ஆக அதிகரித்துள்ளது. “ ரஷ்யா கடந்த 24 மணி நேரத்தில் 8,779 பேருக்கு கரோனா உறுதிப்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து ரஷ்யாவில் கரோனா பாதிப்பு ஏற்பட்டவர்கள் எண்ணிக்கை 5,02,436 ஆக அதிகரித்துள்ளது. மாஸ்கோவில் அதிகபட்சமாக 2லட்சம் பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ரஷ்யாவில் கொரோனாவுக்கு 6 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். இதுவரை ஒரு கோடிக்கும் அதிகமானவர்களுக்கு கொரோனாவுக்கான பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.ரஷ்யாவில் கொரோனா தொற்று ஒருபக்கம் அதிகரிக்கும் நேரத்தில் மாஸ்கோவில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது. ரஷ்யாவில் கொரோனா தொற்று அதிகரித்து வந்தாலும் அங்கு குணமடைந்தவர்கள் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளது .

Read More

ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை பயன்படுத்த உலக சுகாதார அமைப்பு அனுமதி

ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை மருத்துவ பரிசோதனைகளுக்கு பயன்படுத்தலாம் உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸ் தொற்றிக்கு சிகிச்சை அளிக்க மலேரிய தடுப்பு மருந்தான ஹைட்ராக்ஸின் குளோரோகுயின் மருந்து சீனா, இத்தாலி, ஸ்பெயின், பிரிட்டன் ,பிரன்ஸ் ,அமெரிக்கா நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வந்தது.இந்த மருந்து பாதுகாப்பானது அல்ல பயன்படுத்துபவர்களுக்கு இதய நோய் வாய்ப்பு உள்ளது என கூறி உலக சுகாதார அமைப்பு இந்த மருந்தின் பயன்பாட்டை திடீரென நிறுத்தி வைப்பதாக அதன் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கடந்த மே.25ம் தேதி அறிவித்தார். இந்நிலையில் இந்த மருந்தை மருத்துவ பரிசோதனைக்கு பயன்படுத்தலாம் என அறிவித்துள்ளார். இது குறித்து உலக சுகாதார அமைப்பின் நோய் தொற்று பாதுகாப்பு கண்காணிப்புக்குழு வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்த மருந்தை பயன்படுத்தியதால் உயிரிழப்புகள் எதுவுமில்லை என்ற ஆய்வுத்தகவல் தெரிவிக்கப்பட்டதன் அடிப்படையில் ஹைட்ராக்ஸி குரோரோகுயின் மருந்தை…

Read More

இயல்பு நிலைக்கு திரும்பியது ஜப்பான்

ஜப்பானில் 8 மாகாணங்களை விட பிற பகுதிகளில் கட்டுப்பாடுகள் விலக்கப்பட்டதையடுத்து, மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. ஆசிய நாடான ஜப்பானில், ‘கொரோனா’ வைரஸ் தாக்கம் சற்று குறைந்துள்ளது. இந்நிலையில், அங்குள்ள, 47 மாகாணங்களில், டோக்கியோ, ஒசாகா உட்பட எட்டு மாகாணங்களைத் தவிர, மற்ற மாகாணங்களில் கட்டுப்பாடுகள் விலக்கிக் கொள்ளப்பட்டன. சுறுசுறுப்புக்கு பெயர் பெற்ற ஜப்பானியர்கள், மீண்டும் இயல்பு நிலைக்கு வேகமாக திரும்பியுள்ளனர். திட்டமிட்டதை விட, இரண்டு வாரங்களுக்கு முன், கட்டுப்பாடுகள் விலக்கிக் கொள்ளப்பட்டதை எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. ஜப்பானில் 16 ஆயிரத்து 367 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 768 பேர் இதுவரை பலியாகி உள்ளனர். 11 ஆயித்து 564 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர்.

Read More

ஒரு மாதம் உலக சுகாதார ஸ்தாபனத்துக்கு காலக்கெடு விதித்தார் ட்ரம்ப்!!

‘சீனாவின் பிடியிலிருந்து உலக சுகாதார ஸ்தாபனம் இன்னும் 30 நாள்களுக்குள் விடுபடாவிட்டால், அந்த அமைப்புக்கான நிதியுதவி நிரந்தரமாக நிறுத்தப்படும்’ என்று அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். மேலும், ஐ.நா.வின் அந்த அமைப்பிலிருந்து வெளியேறுவது குறித்தும் பரிசீலித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து, உலக சுகாதார ஸ்தாபன இயக்குனர் , டெட்ரோஸ் அதனோமுக்கு எழுதியுள்ள 4 பக்க கடிதத்தில் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளதாவது: கொரோனா நோய்த்தொற்று பரவல் விவகாரத்தில் நீங்களும் உங்கள் தலைமையிலான அமைப்பும் தொடர்ந்து பல தவறுகளை செய்து வந்தீர்கள். அதற்கு உலகம் மிகப் பெரிய விலையைக் கொடுக்க நேர்ந்துள்ளது. இனி, சீனாவின் பிடியிலிருந்து விடுபட்டு சுதந்திரமாகச் செயல்படுவதே உலக சுகாதார ஸ்தாபனத்தின் முன் உள்ள ஒரே வழியாகும். உங்களது அமைப்பை சீரமைப்பது குறித்து எனது அரசு ஏற்கெனவே ஆலோசனையைத் தொடங்கியுள்ளது. இந்த விவகாரத்தில் உடனடியாக செயல்பட…

Read More

கொரோனா தாக்கத்தில் 2ம் இடத்தை பிடித்தது ரஷ்யா

உலகளவில் கொரோனா பாதித்த நாடுகளில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது ரஷ்யா கடந்த ஆண்டு டிசம்பரில் சீனாவின் ஊஹான் மாகாணத்தில் இருந்து கொரோனா வைரஸ் பரவியது. உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் இதன் தாக்கம் அதிகரித்தது. வைரஸ் தொற்றால் அமெரிக்கா, ஸ்பெயின், பிரான்ஸ், இங்கிலாந்து இத்தாலி உள்ளிட்ட நாடுகள் பெரும் உயிரிழப்பை சந்தித்தன. உயிர்பலி எண்ணிக்கையில் அமெரிக்கா இதுநாள் வரையில் முதலிடத்தில் இருந்து வருகிறது. இதனிடையே உலகின் வல்லரசு நாடுகளில் ஒன்றாக கருதப்படும் ரஷ்யாவிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தற்போதைய சூழ்நிலையில் ரஷ்யா இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. இந்நாட்டில் ஒரே நாளில் 9,263 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. மேலும் மொத்த பாதிப்பு 3 லட்சத்தை நெருங்கி வருகிறது.

Read More

கொரோனா குறித்து விசாரணை: முடிவை சாதகமாக மாற்ற சீனா முயற்சி?

கொரோனாவை கட்டுப்படுத்தும் வரை உலக சுகாதார அமைப்பின் விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என சீனா வலியுறுத்தியுள்ளது. இதன் மூலம் விசாரணை முடிவை தனக்கு சாதகமாக மாற்ற சீனாவின் முயற்சிக்கும் என நிபுணர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். கொரோனா வைரஸ் பரவலுக்கு சீனாவே காரணம்; அது சீனாவில் உள்ள பரிசோதனை மையத்தில் உருவாக்கப்பட்டது’ என, அமெரிக்கா தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறது. உலக சுகாதார அமைப்பின் இரண்டு நாள் மாநாடு, விரைவில் நடக்கிறது. இதில், விவாதிக்கப்பட வேண்டிய பொருள் குறித்து, ஆஸ்திரேலியாமற்றும் ஐரோப்பிய யூனியன் ஒரு தீர்மானத்தை கொண்டு வந்துள்ளன. இந்தத் தீர்மானத்திற்கு, இந்தியா உட்பட, 100க்கும் நாடுகள் ஆதரவு தெரிவித்து உள்ளன.’கொரோனா வைரஸ் பாதிப்பில், உலக சுகாதார அமைப்பின் ஒருங்கிணைப்பால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் இருந்து நாம் பெற்ற பாடங்கள் குறித்து, சுதந்திரமாக, விரிவாக மதிப்பிடப்பட வேண்டும். ‘ஏற்கனவே உள்ள நடைமுறைகள் அல்லது…

Read More

தினமும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை உட்கொள்கிறேன்: டிரம்ப்

மலேரியாவிற்கு பயன்படும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை கொரோனா தடுப்பாக தினமும் உட்கொள்வதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மலேரியாவிற்கு எதிரான ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை, கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக பயன்படுத்தலாம் என கடந்த மாதம் அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்திருந்தார். அதன்பின்னர், அது குறித்த ஆராய்ச்சிகள் தீவிரமடைந்தன. இதற்கிடையே இந்தியாவில் இருந்து பெருமளவு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை அமெரிக்கா இறக்குமதியும் செய்தது. ஆனால், இந்த மருந்து குறித்த ஆராய்ச்சியில், உண்மையில் கொரோனாவை முற்றிலும் குணமாக்கும் என்பது இதுவரையில் நிரூபணம் ஆகவில்லை. மேலும், இதை முறையின்றி சாப்பிட்டால் உயிருக்கே ஆபத்து ஏற்படும் என உலக நாடுகளும், அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து ஒழுங்காற்று துறையும் எச்சரிக்கை விடுத்தன. இந்நிலையில் டிரம்ப் அளித்த பேட்டியில் கூறியதாவது: எனக்கு கொரோனாவும், அதன் அறிகுறியும் இல்லை. ஆனாலும், கடந்த…

Read More