தேர்தலா? மக்கள் பாதுகாப்பு முக்கியமா?அரசே தீர்மானிக்க வேண்டும் – சுரேஸ்பிரேமச்சந்திரன்

இலங்கை அரசாங்கம் சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு இருந்த காலத்திலேயே இலங்கை பாராளுமன்றத்தை கலைத்த்து.இது உலக நாடுகளுக்கும் பரவலாம என எதிர்வு கூறப்பட்டிருந்த்து.எனினும் அரசு அவசரப்பட்டு பாராளுமன்றத்தை கலைத்த்து. தேர்தலும் அறிவிக்கப்பட்டு அவசரஅவசரமாக வேட்பு மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டது எனினும் கொரோனா வைரஸ் உலக அளவில் பாரிய தாக்கத்தை செலுத்தியது.அந்த தாக்கம் இலங்கையிலும் செலுத்தியது.இதனால் தேர்தலை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.எனினும் இலங்கை அரசாங்கம் தேர்தலை நடத்துவதற்கு பல முனைகளிலும் முயற்சிகளை எடுத்து வருகின்றது.எனினும் தற்போது உள்ள சூழ்நிலையில் மக்களின் பாதுகாப்பை முக்கியமே தவிர தேர்தல் அல்ல இதனை அரசாங்கம் யோசிக்கவேண்டும் உலக அளவில் வைரஸின் தாக்கம் 20 லட்சத்தை தாண்டியுள்ளது மேலும் ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேர் வரையிலான உயிரிழந்துள்ளனர் இலங்கையிலும் பாதிப்பு உள்ளது.எனவே இந்த நேரத்தில் தேர்தல் முக்கியமல்ல மக்களைப் பாதுகாக்க…

Read More

பாதுகாப்பு தரப்பினரின் முற்றுகையில் இருந்த தாவடி கிராமம் நாளை காலை 6 மணிக்கு மீள்கிறது

யாழ்ப்பாணத்தில் முதலாவதாக அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளியின் கிராமமான தாவடி கிராமம் நாளை காலை 6 மணிக்கு பாதுகாப்புத் தரப்பினரின் முற்றுகையிலிருந்து விலக்கிக் கொள்ளப்படவுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணத்தில் முதலாவது கொரோனா நோயாளியாக இனம்காண பட்டவரின் கிராமம் தாவடி ஆகும்.இந்த கிராமம் சில நாட்களாக பாதுகாப்புத் தரப்பினரின் முற்றுகைக்குள் வைக்கப்பட்டுள்ளதுடன் கிராமத்தில் இருந்து வெளியேற மற்றும் உள்நுழைய தடைவிதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அங்கு வசிப்பவர்களின் சிலருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது எனினும் அவர்களுக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்படவில்லை அண்மையில் வடக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் முடக்கப்பட்டுள்ள கிராமம் வழமையான செயற்பாட்டிற்கு நாளை திங்கட்கிழமை அனுமதிக்கப்படும் என்று தெரிவித்திருந்தார் இக்கிராமம் நாளை காலையிலிருந்து வழமையான செயற்பாடுகளுக்கு அனுமதிக்கப்பட உள்ளது இதேவேளை நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

உள்ளுராட்சி சபைகளின் நிதியில் நிவாரணங்கள் வழங்க முடியாது – ஆளுனர் சார்ள்ஸ்

வடக்கு மாகாண சபைக்கு உட்பட்ட சகல அமைச்சுக்கள் , திணைக்களங்களின் பணியாளர்களின் சொந்த நிதிப் பங்களிப்புடன் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களினதும் நிதிப்பங்களிப்புடன் நிவாரண உதவியை முன்னெடுக்கும் அதேநேரம் உள்ளூராட்சி மன்றங்கள் அரச நிதியை பயன்படுத்த அனுமதிப்பதில்லை என வடக்கு மாகாண ஆளுநர் தலமையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாணத்தில் பணியாற்றும் சகல அரச ஊழியர்களிலும் நிறைவேற்று அதிகாரிகள் ஆயிரத்து 500 ரூபாவும் இடை நிலை உத்தியோகத்தர்கள் ஆயிரம் ரூபாவும் தொழிலாளர்கள் 500 ரூபாவும் நிதிப் பங்களிக்கும் அதேநேரம் வடக்கு மாகாணத்தில் உள்ள 2 ஆயிரத்து 224 உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களினதும் சொந்தப் பங்களிப்பிலான பணங்களில் பிரதேச செயலகங்கள் உறுதி செய்யும பட்டியலிற்கு நிவாரண வழங்கலை மேற்கொள்ளலாம். இதேநேரம் பொருளாக வழங்குவதா அல்லது நிதியாக வழங்குவதா என்பதனை மாவட்டச் செயலாளர்களுடன் உரையாடி தீர்மானிக்க முடியும். இதேநேரம் வடக்கின் பல உள்ளூராட்சி…

Read More

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தியுள்ளோம் கூறுகிறார் இரானுவத் தளபதி

கொரோனா வைரஸிலிருந்து பாதுகாக்க 3496 பேர் இதுவரை தனிமைப்படுத்தல் முகாமில் இருந்தனர். நேற்று அனுப்பப்பட்ட 37 பேர் 21 நாட்கள் இருந்து வெளியேறினர் .இப்போது 1340 பேர் 12 நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கடைசியாக வெளியேறிய 37 பேருக்கு கொரோனா தொற்று உள்ளதா என்பதை ஆராயும் ஆரம்பகட்ட பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. புத்தளம் பகுதியில் அடையாளம் காணப்பட்ட 16 பேர் அக்குறணையில சிலர் அட்டுலுகம , பேருவளை பகுதியில் இருந்து அடையாளம் காணப்பட்ட அல்லது சந்தேகிக்கப்பட்டவர்கள் இந்த 1340 பேரில் உள்ளனர் . அவர்களிடம் இருந்து இன்னொருவருக்கு தொற்று பரவாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இப்போது அடையாளம் காணப்பட்டவர்களுடன் முதலாவது – இரண்டாவது – மூன்றாவது தொடர்பாளர்களாக 48 ஆயிரத்து மூன்று பேர் வரை இருக்கலாமென அறியப்பட்டாலும் நாங்கள் பரவும் வேகத்தை கட்டுப்படுத்தியுள்ளோம். எனவே இதுகுறித்து அச்சப்பட தேவையில்லை. ஏனெனில் ஆரம்பத்தில்…

Read More

கொரோனா சிகிச்சையளிக்க கடற்படையினர் உருவாக்கிய சாதனம்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நபர்களுக்கு சிகிச்சையளிக்க உதவும் ரிமோட் கொண்ரோலர் மூலம் இயக்கக்கூடிய சாதனத்தை ( Medimate) இலங்கை கடற்படைக் குழு கண்டுபிடித்துள்ளது.

Read More

வீட்டில் இருந்தே பனியாற்றும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர்

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக அனைவரையும் வீட்டில் இருந்து பனியாற்றுமாறு அரசு அறிவித்துள்ளது. இதன்படி அரச மற்றும் தனியார் ஊழியர்கள் வீடுகளில் இருந்து பனியாற்றி வருகின்றனர்.இந் நிலையில் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலைமையில் – நாட்டின் தற்போதைய சூழ்நிலையை அறிந்து தனது வீட்டில் இருந்தே இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் கடமையாற்றுகிறார்.

Read More

இலங்கைக்கு ஒரு தொகை மருந்துகளை இந்தியா வழங்கியுள்ளது

இலங்கைக்கு கொரோனா ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான இந்திய மத்திய அரசாங்கம் உதவிகளை வழங்கியுள்ளது. இதன் முதற்கட்டமாக இந்திய அரசாங்கத்தினால் ஒரு தொகை மருந்து இன்றைய தினம் (7) அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் உத்தரவிற்கு அமைய இந்தியாவிற்கு சொந்தமான விசேட விமானத்தின் மூலம் ஒருதொகுதி மருந்துகள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்திய அரசாங்கத்தின் இந்த உதவிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நன்றிகளை தெரிவித்துள்ளார்.

Read More

கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தை மீள கூட்டமாட்டேன் – கோத்தபாய இறுமாப்பு

நாட்டில் மிக விரைவில் பாராளுமன்ற தேர்தலை நடத்துவதே எனது இலக்கு என தெரிவித்துள்ள ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டுவது என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் ஏற்பட்டுள்ள வைரஸ் அச்சுறுத்தலை கட்டுப்படுத்துவதற்கு முழுவீச்சில் நாம் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம் பொதுத் தேர்தலை மிகவிரைவில் நடத்துவதற்காக திட்டங்களை மேற்கொண்டு வருகின்றோம். ஏற்கனவே கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டுவது என்ற பேச்சுக்கே இடமில்லை. நாட்டில் ஏற்பட்டுள்ள சூழ்நிலையை கருத்தில் கொண்டு பொதுத் தேர்தலை எவ்வாறு நடத்தலாம் என்று நாம் ஆராய்ந்து வருகின்றோம் எது எவ்வாறாயினும் பொதுத் தேர்தல் நடத்தப் படுவது என்பதில் உறுதியாகவே இருக்கின்றோம் என்றார்.

Read More

சமூக வலைத்தளங்களில் முக்கிய இடம்பிடித்த முன்னாள் அமைச்சர் பாலித தேவரப்பெரும

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்குச் சட்டம் கடுமையாக அமல்படுத்தப்பட்டு உள்ளது இதனால் அன்றாடம் தொழில் செய்து வாழும் மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு முன்னாள் அமைச்சர் பாலித தேவப்பெரும்சமைத்த உணவுகளை வழங்கி வருகின்றார் அவ்வாறு அவர் சமைத்த உணவுகளை வழங்கி வரும் புகைப்படங்கள் அந்த நேரம் அவர் ஓய்வு எடுத்த புகைப்படம் ஆகியன சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது நாட்டில் அனர்த்தங்கள் ஏற்படும் போது மக்களுக்கு சேவை செய்வதில் முன்னின்று செயற்பட்டு வரும் பாலித தேவப்பெருமவை வடக்கிலும் வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கடந்த காலங்களில் உதவி செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Read More

கொரோனாவால் மரணித்தோரது உடல்களை எரிப்பதா – புதைப்பதா? – ஆராய கோருகிறது அரச மருத்துவர் சங்கம் !

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் உடல்களை எரிக்கலாம் அல்லது புதைக்கலாம் என்ற நியமங்கள் இருக்கும்போது அது குறித்து ஆராய்ந்து உரிய ஏற்பாடுகளை செய்யுமாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தை கேட்டுள்ளது.

Read More