அரசாங்க தகவல் திணைக்களத்தின் ஊழியர் ஒருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. குறித்த நபர் கடந்த 16ம் திகதி பேலியகொட மீன் சந்தைக்கு சென்றிருந்தார் என கூறப்படுகிறது. இதனையடுத்து 40 பேர் வரை தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.
Read MoreCategory: புலனாய்வுச் செய்திகள்
மேலும் 164 பேருக்கு கொரோனா; 156 பேர் சமூகத்தில் இருந்தும், 8 பேர் தனிமைப்படுத்தல் முகாமில் இருந்தும் – இராணுவ தளபதி
நாட்டில் மேலும் 164 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார். இவர்களில் 156 பேர் சமூகத்தில் இருந்தும், 8 பேர் தனிமைப்படுத்தல் முகாமில் இருந்தும் ஏனையவர்கள் பேலியகொட கொத்தனியுடன் தொடர்புடையவர்கள் எனவும் அவர் கூறினார்.
Read Moreஇலங்கை வந்தடைந்தார் அமெரிக்க இராஜாங்க செயலாளர்
அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ளார். இவரது விஜயத்தில் ஜனாதிபதி, பிரதமர், வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
Read More35,000 பேர் அவரவர் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டனர்..!!
கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டோருடன் தொடர்புகளைப் பேணிய முதலாவது தொடர்பாளர்களை வீடுகளிலேயே தனிமைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதில் எவ்வித சிக்கலும் கிடையாது. ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவுகளிலும் நியமிக்கப்பட்டுள்ள மக்கள் பொலிஸ் அதிகாரிகள் ஊடாக இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் தொடர்பான கண்காணிப்பு சேவைகளைப் பெற்றுக் கொள்ள எதிர்பார்த்துள்ளதாக பிரதி பொலிஸ்மா அதிபர் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் , தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களை கண்காணிப்பது சுகாதாரத் துறையினருக்கும் பொலிஸாருக்கும் புதிய விடயமல்ல. இன்றுவரை சுமார் 35 000 பேர் அவரவர் வீடுகளிலேயே சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். மார்ச் மாதம் தொடக்கம் தற்போது வரை ஒரு இலட்சத்து 85,000க்கும் அதிகமானோர் வெவ்வேறு சந்தர்ப்பங்களிலும் தனிமைப்படுத்தப்பட்டனர் என்றும் அவர் தெரிவித்தார்.
Read Moreகொழும்பு டாம் வீதி பொலிஸ் நிலைய அதிகாரிக்கு கொரோனா; பொலிஸ் நிலையம் தற்காலிக முடக்கம்..!!
கொழும்பு டாம் வீதி பொலிஸ் நிலைய அதிகாரி ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து பொலிஸ் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. அவருடன் நெருக்கமாக பணியாற்றிய 12 அதிகாரிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
Read Moreகொழும்பில் 1000 கொரோனா நோயாளர்கள்..?
கொழும்பில் திடீரென நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனைகளில் 937 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொழும்பு மாநகர சபையின் பிரதான பொது சுகாதார அதிகாரி ருவன் விஜயமுனி இதனை தெரிவித்துள்ளார்.
Read Moreமினுவங்கொட கொரோனா கொத்தனி-சட்டமா அதிபர் விடுத்த அறிவிப்பு
மினுவங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் கொரோனா தொற்று ஏற்பட்டமை குறித்து விசாரித்து அதன் அறிக்கையினை இரண்டு வாரங்களில் சமர்பிக்குமாறும் சட்டமா அதிபர் பதில் பொலிஸ்மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளார். மினுவங்கொட உட்பட இரண்டாவது கொரோனா பரவல் அலை ஆரம்பாகிய இடம் குறித்த சர்ச்சை மற்றும் அறிகுறிகள் இல்லாமல் தொற்று பரவும் வீதம் அதிகரிப்புக்கு மத்தியில் சட்டமா அதிபரின் இந்த பணிப்புரை வெளியாகியுள்ளது.
Read Moreகொரோனாவால் மேலும் இருவர் உயிரிழப்பு..!!
19 வயது மற்றும் 65 வயதுடைய கெசல்வத்த, கொழும்பு-02 பகுதிகளை சேர்ந்தவர்களே சற்றுமுன் உயிரிழந்துள்ளனர்
Read More11 விசேட அதிரடிப் படையினருக்கு கொரோனா தொற்று; முகாம்களும் முடக்கப்பட்டது..!!
விசேட அதிரடிப்படையில் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவிட்-19 வைரஸ் தடுப்பு படையணி இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து குறித்த 11 பேருடன் நெருக்கமாக இருந்தவர்கள் மற்றும் தொடர்பில் இருந்தவர்கள் என 345 பொலிஸார் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அத்துடன் களுபோவில, ராஜகிரிய மற்றும் களனி முகாம் முடக்கப்பட்டன.
Read Moreகொரோனா 2ம் அலை ஏற்பட்டது இப்படித்தான்; இரகசிய அறிக்கை கசிந்தது..!!
இலங்கையில் கோரோனா தாக்கத்தின் இரண்டாவது அலை ஏற்பட்ட விதம் பற்றி புலனாய்வு பிரிவினர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் இரகசிய அறிக்கை ஒன்றை வழங்கியுள்ளனர். இதன்படி கடந்த செப்டம்பர் மாதம் இலங்கை வந்த துருக்கி விமான சேவைகள் நிறுவனத்தின் விமானத்தில் வந்த யுக்ரைன் பணிக்குழு மூலமே தொற்று இலங்கையில் பரவியுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பணிக்குழு சீதுவ பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியுள்ளது. இப்படி வெளிநாட்டு நபர்கள் தங்கினால் அங்குள்ள அனைவரும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்பது கோவிட்19 சட்டமாகும். இந்த ஹோட்டலில் உள்ள 60 பணியாளர்களின் அறைவாசிப்பேர் பொதுப்போக்குவரத்து மூலம் தினமும் தொழிலுக்கு வருபவர்கள். தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியும் அவர்கள் தினமும் வீடுகளுக்கு சென்று வந்ததை கைவிடவில்லை. அப்படி சென்று வருபவர்களில் ஒருவர் மினுவங்கொட ஆடைத்தொழிற்சாலை ஊழியருடன் தொடர்பில் இருந்தவர் என்பது…
Read More