மிகப் பெரிய அருமையான என்ட்ரியுடன் மீண்டும் வருவேன் – வடிவேலு தெரிவிப்பு

பல வருடங்களாக திரைப்படங்களில் நடிக்காமலிருந்த நடிகர் வடிவேலு, மீண்டும் மிகப் பெரிய என்ட்ரியுடன் வருவேன் எனத் தெரிவித்துள்ளார். தனது நகைச்சுவை நடிப்பால் உலகெங்கும் தமிழ்பேசும் மக்களின் இதயங்களைக் கொள்ளை கொண்ட நடிகர் வடிவேலு 12 ஆம் திகதி சனிக்கிழமை தனது 60-வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்தனர். அவ்வாழ்த்துக்களுக்கு நன்றி தெரிவித்து நடிகர் வடிவேலு தனது சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அவ்வீடியோவில்; அவர் ‘செப்டம்பர் 12 ஆம் திகதி என்னுடைய பிறந்தநாள். நான் தினமும் மக்களை சிரிக்க வைப்பதால் தினமும் பிறந்துக்கிட்டு தான் இருக்கிறேன். ஒவ்வொரு குடும்பத்திலும் நகைச்சுவை செல்வமாக நான் பிறந்து கொண்டு தான் இருக்கேன். என்னை பெற்ற அம்மாவுக்கு முதலில் நன்றி சொல்லிக்கிறேன். இவ்வளவுக்கும் மக்கள் சக்தி தான் காரணம். மக்கள்…

Read More

கதைகளை எழுதித்தள்ளும் இயக்குனர்கள்

கொரானோ ஊரடங்கு எத்தனையோ பேருக்கு வலிகளைக் கொடுத்தாலும் சிலருக்கு வழிகளைக் காட்டியுள்ளது. சினிமா இயக்குனர்கள் பலரும் இந்த கொரானோ ஊரடங்கு காலத்தில் நான்கைந்து கதைகள் எழுதிவிட்டேன், பத்துப் பதினைந்து கதைகள் எழுதிவிட்டேன் என்று சொல்லி வருகிறார்கள். அப்படியென்றால் அடுத்த பத்து, பதினைந்து வருடங்களுக்கு அவர்களுக்குக் கதைப் பஞ்சம் இருக்காது. அந்தக் கதைகளை வைத்து அவர்கள் படங்களை இயக்கிய பிறகு படத்தில் எங்கே கதை இருக்கிறது என்று யாரும் கேட்கக் கூடாது. அதே சமயம், இந்த கொரானோ ஊரடங்கு காலத்தில்தான் அமேசான், நெட்பிளிக்ஸ், ஹாட்ஸ்டார், யு டியூப் என உலகப் படங்கள் பலவற்றையும் பல இயக்குனர்கள் பார்த்துத் தள்ளி இருக்கிறார்கள். அதே போல சினிமா ரசிகர்கள் பலரும் அந்தப் படங்களைப் பார்த்து வருகிறார்கள். எனவே, எதிர்காலப் படங்களில் இடம் பெற உள்ள கதைகள் ஒரிஜனல் கதைகளா அல்லது சுட்ட…

Read More

விஜய்யைப் பார்த்து பொறாமைப்பட்ட அஜித்

தமிழ் சினிமாவில் தற்போது கடுமையான போட்டியாளர்கள் என்றால் அது விஜய், அஜித் மட்டும்தான். இருவருடைய படங்களுக்கு எப்படிப்பட்ட வரவேற்பு, எப்படிப்பட்ட வசூல் கிடைக்கிறது என்பதுதான் திரையுலகில் முக்கியமான போட்டியாக உள்ளது. சமூக வலைத்தளங்களில் கூட அவர்களது ரசிகர்கள்தான் அதிகமாக போட்டி போடுவதை விட சண்டை போட்டுக் கொள்கிறார்கள். அவர்கள் மேலும் சண்டை போட்டுக் கொள்ளும் விதமாக பின்னணிப் பாடகியும், ஆர்ஜேவுமான சுசித்ரா சமீபத்திய பேட்டி ஒன்றில் ஒரு தகவலைச் சொல்லியிருக்கிறார். ‘சுசி லீக்ஸ்’ என சில வருடங்களுக்கு முன்பு பரபரப்பை ஏற்படுத்திய சுசித்ரா, தற்போது மீண்டும் ஆர்ஜே பணிக்குத் திரும்பியுள்ளார். அவர் பேட்டி கொடுத்ததாக ஒரு செய்தி தற்போது பரவி வருகிறது. சில வருடங்களுக்கு முன்பு ஒரு பார்ட்டியில் அஜித்தை சந்தித்தாராம் சுசித்ரா. ‘வேட்டைக்காரன்’ படம் வெளிவந்த அந்த சமயத்தில் அப்படத்தில் இடம்பெற்ற சுசித்ரா பாடிய ‘ஒரு…

Read More

பிளாஸ்மாவை நன்கொடையாக வழங்குகிறார் கனிகா கபூர்

கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்த பாலிவுட் பாடகி கனிகா கபூர், தனது பிளாஸ்மாவை நான்கொடையாக வழங்க முன்வந்துள்ளார். பிரபல பாலிவுட் பாடகி கனிகாகபூர் கடந்த மார்ச் மாதம் லண்டனிலிருந்து இந்தியா வந்தார். லக்னோவில் இவரது நிகழ்ச்சி நடந்த போது பார்லி. எம்.பி.க்கள் உள்ளிட்ட வி.ஐ.பி.கள் பங்கேற்றனர். அப்போது கனிகா கபூருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து கனிகா கபூர் மீது நோய் தொற்றை பரப்பியது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் லக்னோ போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். லக்னோவில் உள்ள சஞ்சய் காந்தி முதுகலை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் தனிமை வார்ட்டில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சமீபத்தில் குணமடைந்தார். இந்நிலையில் பிளாஸ்மா தெரபி முறையில் கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் முறையின் கீழ் தனது பிளாஸ்மாவை கொரோனா பாதித்தவர்களுக்கு நன்கொடையாக வழங்க முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. லக்னோவில் உள்ள…

Read More

கொரோனா தடுப்பு நிவாரணம் : விஜய் தேவரகொண்டா முயற்சிக்கு வரவேற்பு

தெலுங்கானாவில் ஊரடங்கு காலத்தில் பாதிக்கப்பட்ட ஏழை எளியவர்களுக்கு தனது அறக்கட்டளை மூலம் உதவிகளை செய்வது தொடர்பாக நடிகர் விஜய் தேவரகொண்டா வீடியோ பதிவிட்டிருந்தார். இதற்கு பொது மக்கள் உட்பட பல தரப்புகளிலிருந்தும் வரவேற்பு கிடைத்துள்ளது. கொரோனா வைரசின் தாக்கம் தெலுங்கானாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதனை கட்டுக்குள் வைக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா இது தொடர்பாக நேற்றுமுன்தினம் (ஏப்.,26) வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில் கூறியதாவது : கொரோனா பாதிப்பு போன்ற சிக்கலான நேரங்களிலும் மாநில அரசு சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஏழை எளியவர்களிடம் வீட்டு வாடகை வாங்க கூடாது எனவும் முதல்வர் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். இதற்காக மாநில முதல்வர் சந்திரசேகர ராவிற்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மாநிலத்தில் வேலை வாய்ப்பு தொடர்பாக பலருக்கும்…

Read More

மாற்றுத்திறனாளிகளுக்கு நிதியுதவி: வங்கியில் நேரடியாக செலுத்திய லாரன்ஸ்

கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சம், முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சம், நடன கலைஞர்கள் சங்கத்திற்கு ரூ.50 லட்சம், மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.25 லட்சம், தான் பிறந்து வளர்ந்த ராயபுரம் பகுதியில் உள்ள ஏழை மக்களுக்காக ரூ.75 லட்சம் என முதற்கட்டமாக ரூ.3 கோடியை அறிவித்தார். பின்னர் நடிகர் சங்கம், விநியோகஸ்தர்கள் சங்கம், தூய்மை பணியாளர்கள், அம்மா உணவகம் என தொடர் உதவிகளை செய்து வருகிறார். இதுவரை ரூ.4 கோடிக்கும் மேல் லாரன்ஸ் நிதியுதவி அளித்துள்ளார். இதில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கிய ரூ.25 லட்சத்தில், முதற்கட்டமாக 50 பேருக்கு தலா ரூ.25 ஆயிரத்தை ராகவா லாரன்ஸ் வழங்கியிருக்கிறார். இந்த உதவித்தொகை சம்பந்தப்பட்டவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது.

Read More

விஜய் தேவரகொண்டா ரூ.1.30 கோடி நிவாரண உதவி

தெலுங்குத் திரையுலகின் இளம் நாயகன் விஜய் தேவரகொண்டா, கொரானோ நிதியுதவியாக எதுவும் அளிக்கவில்லை என்ற ஒரு குற்றச்சாட்டு இருந்து வந்தது. இந்நிலையில் ரூ.1.30 கோடி நிவாரண உதவியை அறிவித்துள்ளார் விஜய் தேவரகொண்டா. நிவாரண உதவி வேண்டுவோர் அவரது அறக்கட்டளை இணையதளத்தில் அதற்காக பதிவு செய்ய வேண்டும். மிடில் கிளாஸ் நிவாரண உதவி என இதற்குப் பெயரிட்டிருக்கிறார் விஜய். இத்தனை நாட்களாக இந்த நிவாரண உதவி செய்வதற்காக தேவையான பணத்தை ஏற்பாடு செய்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும், நிவாரண உதவி தர விரும்புவோர் அவரது அறக்கட்டளைக்கும் தரலாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார். தெலுங்கு நடிகர்கள், நடிகைகள் முதல்வர் நிதி, பிரதமர் நிதி, திரைப்படத் தொழிலளார் நிதி என கொடுத்துக் கொண்டிருக்க விஜய் தேவரகொண்டா வித்தியாசமாக இணையதளம் மூலம் நேரடியாக உதவி வழங்குவதை ஆரம்பித்துள்ளார்.

Read More

கொரோனா தடுப்பு : விஜய் ரூ.1.30 கோடி நிதி

உலகை அச்சுறுத்தி கொண்டு இருக்கும் கொடிய நோயான கொரோனா வைரஸ், இந்தியாவையும் ஆட்டிப்படைக்கிறது. நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு, ஒரு மாதத்தை எட்ட உள்ளது. மேலும் இது மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் பலரும் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். நோயை கட்டுப்படுத்தவும், மக்களுக்கு உதவ மத்திய, மாநில அரசுகள் நிதி கேட்டுள்ளனர். பணம் படைத்தவர்கள் முதல் சாதாரண நடுத்தர மக்கள் வரை தங்களால் இயன்ற நிதி உதவியை அளித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் விஜய், கொரோனா தொடர்பாக எந்த ஒரு அறிக்கையோ, நிதி உதவியோ அளிக்காமல் இருந்தார். எந்த ஒரு நிகழ்விலும் பங்கேற்காத நடிகர் அஜித்தே ரூ.1.25 கோடி நிதி அளித்து இருந்தார். ஆனால் சினிமா விழாக்களில் அரசியல் பேசும் விஜய், எதிர்காலத்தில் அரசியல் கனவோடு இருக்கும்…

Read More

கொரோனாவால் நோயாளி இறந்தால்….. இலங்கை சுகாதார அமைச்சு வெளியிட்ட விதிமுறை

கொரோனா வைரஸ் தொற்றினால் மரணமாவோரின் உடல்கள் தகனம் செய்யப்படவேண்டும் என்ற அடிப்படையிலான “நிரந்தரமான நடவடிக்கை ஒழுங்குமுறை” என்ற அடிப்படையில் விதிகளை இலங்கையின் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது. நோய்ப் பரவலைத் தடுக்கும் வகையில் இந்தமுறை பின்பற்றப்படுவதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது. நீர்கொழும்பில் கொரோனா வைரஸால் இறந்தவரின் ஜனாஸா நல்லடக்கம் செய்யப்படாமல் தகனம் செய்யப்பட்டமை தொடர்பில் எதிர்ப்பு வெளியிப்பட்டுள்ள நிலையிலேயே சுகாதார அமைச்சு புதிய ஒழுங்குவிதிகளை அறிவித்துள்ளது.

Read More

கொரோனா வைரஸ் தொற்று – மேலும் பல நிவாரணங்களை அறிவித்தார் ஜனாதிபதி

கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் பாதிக்கப்பட்டுள்ள குறைந்த வருமானம் பெறும் மற்றும் இடர் நிலைமைக்குள்ளான குடும்பங்கள் மற்றும் நபர்களுக்கு மேலும் பல பண மற்றும் பொருள் நிவாரணங்கள் வழங்கப்படவுள்ளன. ஒரே தடவையில் வழங்கப்படும் கொடுப்பனவாக 5000 ரூபாவை வழங்குவதன் மூலம் அவர்கள் முகம்கொடுத்துள்ள பொருளாதார கஷ்டங்கள் தணியும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அத்தியாவசிய சேவைகளை வழமையான ஒழுங்கில் பேணுவதற்காக தாபிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலணிக்கு பணிப்புரை வழங்கியுள்ளார். ஜனாதிபதியால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிவாரணங்கள் மற்றும் அவற்றை நடைமுறைப்படுத்தும் விதம் குறித்து விளக்கும் சுற்றுநிருபமொன்று ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி பீ.பி. ஜயசுந்தர அவர்களின் கையொப்பத்துடன் இன்று வெளியிடப்பட்டுள்ளது. அது, நிதி, பொருளாதார மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சு மற்றும் பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சினால் அமைச்சுக்களின் செயலாளர்கள், அனைத்து மாவட்ட, பிரதேச செயலாளர்களுக்கு…

Read More