மீண்டும் குடும்பத்துடன் டான்ஸ் : அசத்தும் வார்னர்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வீரரான டேவிட் வார்னர், இந்த கொரானோ ஊரடங்கு காலத்தில் அவருடைய ரசிகர்களையும், ஐபிஎல் போட்டியில் அவர் சார்ந்த ஹைதராபாத் அணி ரசிகர்களையும் நிறையவே மகிழ்வித்து வருகிறார். இரண்டு வாரங்களுக்கு முன்பு அல்லு அர்ஜுன் நடித்த ‘அலா வைகுந்தபுரம்லோ’ படத்தில் இடம் பெற்ற சூப்பர் ஹிட் பாடலான ‘புட்ட பொம்மா’ பாடலுக்கு மனைவி, மகளுடன் இணைந்து நடனமாடி ஒரு டிக்டாக் வீடியோவை வெளியிட்டார். இன்ஸ்டாகிராமில் மட்டும் அந்த வீடியோவை இதுவரையில் 42 லட்சம் பேர் பார்த்துள்ளனர். அதற்கடுத்து நேற்று மீண்டும் ஒரு டிக்டாக் வீடியோவை வெளியிட்டுள்ளார். மீண்டும் ‘அலா வைகுந்தபுரம்லோ’ படத்தில் இடம் பெற்ற ‘ராமுலோ ராமுலா’ பாடலுக்கு தனது மனைவி, மகளுடன் நடனமாடியுள்ளார். அதற்குள் இந்தப் பாடலை 13 லட்சம் பேர் பார்த்துவிட்டனர். இந்த வீடியோவைப் பார்த்த அல்லு அர்ஜுன், “மீண்டும் ஒரு…

Read More

டெஸ்லா நிறுவனர் குழந்தைக்கு சூட்டப்பட்டுள்ள விசித்திரமான பெயர்

டெஸ்லா எலெக்ட்ரிக் கார், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் தொழிலதிபர் எலான் மஸ்க். அமெரிக்காவின் மிகப்பெரிய செல்வந்தர்களில் ஒருவரான இவருக்கும் இவரது மனைவி கிரிம்ஸுக்கும் பிறந்த ஆண் குழந்தைக்கு X Æ A-12 என்று பெயர் சூட்டி உள்ளனர். கணித சூத்திரம் போல, இது என்ன பெயர் என அனைவரும் வியந்தனர். மகனின் இந்த பெயரை மஸ்க் முன்னதாக டுவிட்டரில் வெளியிட்டிருந்தார். எலான் மஸ்குக்கு லாஸ் எஞ்சலிஸ், பெல் ஏர், சன் பிரான்சிஸ்கோ உள்ளிட்ட இடங்களில் பல வீடுகள் உள்ளன. தற்போது இவரும் இவரது மனைவியும் கலிப்போர்னியா இல்லத்தில் வசிக்கின்றனர். கலிபோர்னியா மாகாண சட்டப்படி அங்குள்ள குடிமக்கள் தங்கள் குழந்தைகளுக்கு ஆங்கில எழுத்துக்களில் மட்டுமே பெயர் வைக்கவேண்டும். கணித குறியீடுகள், கணித யூனிட்டுகள், எண்களை, குழந்தையின் பெயர்களில் பயன்படுத்த அனுமதி கிடையாது. ஆக, இந்த வித்தியாசமான பெயரை அங்கீகரித்து…

Read More

வாட்ஸ் ஆப் வீடியோ காலில் திருமணம்: போனுக்கு தாலி கட்டிய மணமகன்

ஊரடங்கு காரணமாக, கேரளாவில் இருக்கும் மணமகனுக்கும், லக்னோவில் இருக்கும் மணமகளுக்கும், வாட்ஸ் ஆப் வீடியோ கால் மூலம் திருமணம் நடந்தது. இதில் மணமகன் மொபைல் போனுக்கு தாலி கட்ட, மணமகள், தனக்கு தானே தாலி கட்டி கொண்டார். இது குறித்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. கேரளா மாநிலம் கோட்டயம் சங்கனாச்சேரி பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீஜித். வங்கி அதிகாரி. ஆலப்புழா பள்ளிப்பாடு பகுதியை சேர்ந்தவர் அஞ்சனா. இவர் லக்னோவில் பொறியாளராக உள்ளார். இருவருக்கும் ஏப்., 26 அன்று திருமணம் செய்ய நிச்சயம் செய்யப்பட்டது. ஆனால், ஊரடங்கு காரணமாக லக்னோவில் இருந்து அஞ்சனா வர முடியவில்லை. இருப்பினும், நிச்சயிக்கப்பட்ட நாளில் திருமணத்தை நடத்த இரு வீட்டாரும் தீர்மானித்தனர். வீடியோ காலில் திருமணத்தை நடத்த இருவரும் முடிவு செய்தனர். இதன்படி லக்னோவில் உள்ள அஞ்சனா மணப்பெண் கோலத்திலும், கேரளாவில், ஸ்ரீஜித்…

Read More

இங்கிலாந்தில் இலவசமாக டோர் டெலிவரி செய்யும் ரோபோக்கள்

இங்கிலாந்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டிற்குள் முடங்கியுள்ள மக்களுக்கு, மளிகை பொருட்களை ஷாப்பிங் ரோபோக்கள் டோர் டெலிவரி செய்து வருகின்றன. இங்கிலாந்தின் மில்டன் கெய்ன்ஸ் நகரில் முழங்கால் அளவு உயரம், வெள்ளை நிற பிளாஸ்டிக் பெட்டி போன்று இருக்கும் ரோபோக்கள், ஆறு சக்கரங்கள் உதவியுடன் வலம்வருவதை சாதாரணமாக காண முடியும். கடந்த 2 வருடங்களாக இதே போன்று ரோபோக்கள் மளிகை பொருட்களை டெலிவரி செய்து வருகின்றன. ஆனால் இங்கிலாந்து அரசு மார்ச் 23 முதல் சமூக இடைவெளியை கடுமையாக பின்பற்ற உத்தரவிட்டதில் இருந்து, முன் எப்போதும் இல்லாத அளவுக்கு பிஸியாக செயல்பட துவங்கிய ரோபோ, சுகாதார பணியாளர்களுக்கு இலவசமாக பொருட்களை டெலிவரி செய்து வருகிறது. பொதுமக்களிடையே ரோபோ சேவைக்கான தேவையும் வெகுவாக அதிகரித்துள்ளது. ‛தற்போது நாங்கள் அனைத்து சுகாதார பணியாளர்களுக்கும் இலவசமாக டெலிவரி செய்து வருகிறோம். இந்த…

Read More

சங்கானை இளைஞர்கள் செய்த செயல் !!

யாழ்ப்பாணத்தில் ஊரடங்கு வேளையில் ஆங்காங்கு வீதிகளில் உண்ண உணவுவின்றிஅலைந்து திரிந்த நன்றியுள்ள பிராணி நாய்களுக்கு சமைத்த உணவை இளைஞர்கள் இட்டார்கள். சங்கானை இந்து இளைஞர் மன்றத்தின் இளைஞர்களின் செயல் பாராட்டப்பட வேண்டியது.நாட்டில் ஊரடங்கு சட்டம் காரணமாக அனைத்தும் முடங்கி உள்ள நிலையில் பிராணிகளுக்கு இளைஞர்கள் உணவு வழங்கியமை நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Read More

கொரோனா சிகிச்சையளிக்க கடற்படையினர் உருவாக்கிய சாதனம்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நபர்களுக்கு சிகிச்சையளிக்க உதவும் ரிமோட் கொண்ரோலர் மூலம் இயக்கக்கூடிய சாதனத்தை ( Medimate) இலங்கை கடற்படைக் குழு கண்டுபிடித்துள்ளது.

Read More

வீட்டில் இருந்தே பனியாற்றும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர்

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக அனைவரையும் வீட்டில் இருந்து பனியாற்றுமாறு அரசு அறிவித்துள்ளது. இதன்படி அரச மற்றும் தனியார் ஊழியர்கள் வீடுகளில் இருந்து பனியாற்றி வருகின்றனர்.இந் நிலையில் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலைமையில் – நாட்டின் தற்போதைய சூழ்நிலையை அறிந்து தனது வீட்டில் இருந்தே இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் கடமையாற்றுகிறார்.

Read More

சமூக வலைத்தளங்களில் முக்கிய இடம்பிடித்த முன்னாள் அமைச்சர் பாலித தேவரப்பெரும

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்குச் சட்டம் கடுமையாக அமல்படுத்தப்பட்டு உள்ளது இதனால் அன்றாடம் தொழில் செய்து வாழும் மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு முன்னாள் அமைச்சர் பாலித தேவப்பெரும்சமைத்த உணவுகளை வழங்கி வருகின்றார் அவ்வாறு அவர் சமைத்த உணவுகளை வழங்கி வரும் புகைப்படங்கள் அந்த நேரம் அவர் ஓய்வு எடுத்த புகைப்படம் ஆகியன சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது நாட்டில் அனர்த்தங்கள் ஏற்படும் போது மக்களுக்கு சேவை செய்வதில் முன்னின்று செயற்பட்டு வரும் பாலித தேவப்பெருமவை வடக்கிலும் வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கடந்த காலங்களில் உதவி செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Read More

காதலிக்கு கொரோனா வைரஸ் இருப்பதை அறிந்த காதலன் செய்த செயல்

இத்தாலியில் தனது காதலிக்கு கொரோனா வைரஸ் இருப்பதை அறிந்த காதலன் அவரது கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். இதில் கொலை செய்யப்பட்ட பெண் வைத்தியர் ஆவார்.குறித்த காதலியின் பெயர் குவாரண்டினா வயது 27 என்றும், காதலர் ஒரு ஆண் தாதியர் பெயர் அந்தோனியா டி பீஸ் வயது 28,எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Read More

கொரோனாவால் நோயாளி இறந்தால்….. இலங்கை சுகாதார அமைச்சு வெளியிட்ட விதிமுறை

கொரோனா வைரஸ் தொற்றினால் மரணமாவோரின் உடல்கள் தகனம் செய்யப்படவேண்டும் என்ற அடிப்படையிலான “நிரந்தரமான நடவடிக்கை ஒழுங்குமுறை” என்ற அடிப்படையில் விதிகளை இலங்கையின் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது. நோய்ப் பரவலைத் தடுக்கும் வகையில் இந்தமுறை பின்பற்றப்படுவதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது. நீர்கொழும்பில் கொரோனா வைரஸால் இறந்தவரின் ஜனாஸா நல்லடக்கம் செய்யப்படாமல் தகனம் செய்யப்பட்டமை தொடர்பில் எதிர்ப்பு வெளியிப்பட்டுள்ள நிலையிலேயே சுகாதார அமைச்சு புதிய ஒழுங்குவிதிகளை அறிவித்துள்ளது.

Read More