விஜய் தேவரகொண்டா ரூ.1.30 கோடி நிவாரண உதவி

தெலுங்குத் திரையுலகின் இளம் நாயகன் விஜய் தேவரகொண்டா, கொரானோ நிதியுதவியாக எதுவும் அளிக்கவில்லை என்ற ஒரு குற்றச்சாட்டு இருந்து வந்தது.

இந்நிலையில் ரூ.1.30 கோடி நிவாரண உதவியை அறிவித்துள்ளார் விஜய் தேவரகொண்டா. நிவாரண உதவி வேண்டுவோர் அவரது அறக்கட்டளை இணையதளத்தில் அதற்காக பதிவு செய்ய வேண்டும்.

மிடில் கிளாஸ் நிவாரண உதவி என இதற்குப் பெயரிட்டிருக்கிறார் விஜய். இத்தனை நாட்களாக இந்த நிவாரண உதவி செய்வதற்காக தேவையான பணத்தை ஏற்பாடு செய்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும், நிவாரண உதவி தர விரும்புவோர் அவரது அறக்கட்டளைக்கும் தரலாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தெலுங்கு நடிகர்கள், நடிகைகள் முதல்வர் நிதி, பிரதமர் நிதி, திரைப்படத் தொழிலளார் நிதி என கொடுத்துக் கொண்டிருக்க விஜய் தேவரகொண்டா வித்தியாசமாக இணையதளம் மூலம் நேரடியாக உதவி வழங்குவதை ஆரம்பித்துள்ளார்.

Related posts

Leave a Comment