மாற்றுத்திறனாளிகளுக்கு நிதியுதவி: வங்கியில் நேரடியாக செலுத்திய லாரன்ஸ்

கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சம், முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சம், நடன கலைஞர்கள் சங்கத்திற்கு ரூ.50 லட்சம், மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.25 லட்சம், தான் பிறந்து வளர்ந்த ராயபுரம் பகுதியில் உள்ள ஏழை மக்களுக்காக ரூ.75 லட்சம் என முதற்கட்டமாக ரூ.3 கோடியை அறிவித்தார்.

பின்னர் நடிகர் சங்கம், விநியோகஸ்தர்கள் சங்கம், தூய்மை பணியாளர்கள், அம்மா உணவகம் என தொடர் உதவிகளை செய்து வருகிறார். இதுவரை ரூ.4 கோடிக்கும் மேல் லாரன்ஸ் நிதியுதவி அளித்துள்ளார்.

இதில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கிய ரூ.25 லட்சத்தில், முதற்கட்டமாக 50 பேருக்கு தலா ரூ.25 ஆயிரத்தை ராகவா லாரன்ஸ் வழங்கியிருக்கிறார். இந்த உதவித்தொகை சம்பந்தப்பட்டவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது.

Related posts

Leave a Comment