கொரோனா தடுப்பு நிவாரணம் : விஜய் தேவரகொண்டா முயற்சிக்கு வரவேற்பு

தெலுங்கானாவில் ஊரடங்கு காலத்தில் பாதிக்கப்பட்ட ஏழை எளியவர்களுக்கு தனது அறக்கட்டளை மூலம் உதவிகளை செய்வது தொடர்பாக நடிகர் விஜய் தேவரகொண்டா வீடியோ பதிவிட்டிருந்தார். இதற்கு பொது மக்கள் உட்பட பல தரப்புகளிலிருந்தும் வரவேற்பு கிடைத்துள்ளது.

கொரோனா வைரசின் தாக்கம் தெலுங்கானாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதனை கட்டுக்குள் வைக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா இது தொடர்பாக நேற்றுமுன்தினம் (ஏப்.,26) வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

அதில் கூறியதாவது : கொரோனா பாதிப்பு போன்ற சிக்கலான நேரங்களிலும் மாநில அரசு சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஏழை எளியவர்களிடம் வீட்டு வாடகை வாங்க கூடாது எனவும் முதல்வர் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். இதற்காக மாநில முதல்வர் சந்திரசேகர ராவிற்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மாநிலத்தில் வேலை வாய்ப்பு தொடர்பாக பலருக்கும் திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படுகிறது. மாநிலத்தில் மிகவும் ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்களுக்காக ரூ.1.30 கோடியை தேவரகொண்டா அறக்கட்டளை செலவளிக்க உள்ளது. அதனால் அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை அருகிலுள்ள பல்பொருள் அங்காடிகளில் வாங்கி கொள்ளலாம். இவ்வாறு கூறியிருந்தார். இது குறித்து பொது மக்கள் உள்ளிட்ட பலரிடமிருந்தும் வரவேற்பு கிடைத்துள்ளதாக இன்று பேஸ்புக்கில் தேவரகொண்டா பதிவிட்டிருந்தார்.

இது குறித்து நடிகரும், தயாரிப்பாளருமான சார்ம் கவுர் டுவிட்டரில் பதிவிட்டதாவது : இது உண்மையில் அருமை. இது ஒவ்வொரு நாளும் பெரியதாக மாறும். உங்களுக்கும் உங்கள் முழு அணிக்கும் அதிக பலம். மனித போராளி நீங்கள். வாழ்த்துக்கள். இவ்வாறு கூறினார்.

தொடர்ந்து, ஆர்.எக்ஸ் 100 நடிகர் கார்த்திகேயா கும்மகொண்டா, தேவரகொண்டா அறக்கட்டளைக்கு தனது பங்காக ரூ.1 லட்சம் நன்கொடை அளித்தார். அவரது டுவிட்டரில், வார்த்தைகளே இல்லை தேவரகொண்டா அண்ணா. இது பெரிய செயல். மரியாதையான காரியம். தற்போது வேலைவாய்ப்பின்மை பெரிய பிரச்னையாக உள்ளது. எனது பங்கை அளித்திருக்கிறேன் என்றார்.

தொடர்ந்து, நடிகர் விஜய் தேவரகொண்டா, நேற்று (ஏப்.,27) தனது பேஸ்புக்கில் இதுகுறித்து பதிவிட்டதாவது : இது மாயமாகவும் , மகிழ்ச்சியாகவும் உள்ளது. எனது முயற்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பலரும் ஆதரவும் நிதியும் அளிக்கின்றனர். இந்த MCF ( Middle Class Fund ) அதன் வெற்றி உங்களுக்கு சொந்தமானது. நான் உங்களைத் தாழ்த்த மாட்டேன் என்று சத்தியம் செய்கிறேன், எங்களை அணுகும் ஒவ்வொருவரையும் நாங்கள் அடைவோம், எங்களை நோக்கி பிரகாசிக்கும் மகிழ்ச்சியான புன்னகையை நாம் அனைவரும் அனுபவிப்போம். ஒரு நாளில் எனது ரூ .25 லட்சத்தை ரூ .40+ லட்சமாக மாற்றினீர்கள். ஒன்றாக நாங்கள் இப்போது 2000+ குடும்பங்கள் என்ற இலக்கை 4000 + குடும்பங்களுக்கு மீட்டமைத்துள்ளோம். இன்று எங்கள் அணி 4 ஆக இருந்தது, நாளை அதை 34 ஆக ஆக்குகிறோம், எனவே அதிக நபர்களை விரைவாக அடைய முடியும். இவ்வாறு பதிவிட்டார்.

Related posts

Leave a Comment