பிளாஸ்மாவை நன்கொடையாக வழங்குகிறார் கனிகா கபூர்

கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்த பாலிவுட் பாடகி கனிகா கபூர், தனது பிளாஸ்மாவை நான்கொடையாக வழங்க முன்வந்துள்ளார்.

பிரபல பாலிவுட் பாடகி கனிகாகபூர் கடந்த மார்ச் மாதம் லண்டனிலிருந்து இந்தியா வந்தார். லக்னோவில் இவரது நிகழ்ச்சி நடந்த போது பார்லி. எம்.பி.க்கள் உள்ளிட்ட வி.ஐ.பி.கள் பங்கேற்றனர். அப்போது கனிகா கபூருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து கனிகா கபூர் மீது நோய் தொற்றை பரப்பியது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் லக்னோ போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

லக்னோவில் உள்ள சஞ்சய் காந்தி முதுகலை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் தனிமை வார்ட்டில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சமீபத்தில் குணமடைந்தார்.

இந்நிலையில் பிளாஸ்மா தெரபி முறையில் கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் முறையின் கீழ் தனது பிளாஸ்மாவை கொரோனா பாதித்தவர்களுக்கு நன்கொடையாக வழங்க முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. லக்னோவில் உள்ள கே. ஜி.எம்.யு., எனப்படும் கிங் ஜியார்ஜ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கனிகா கபூருக்கு முழு உடல் பரிசோதனை செய்த பின்னர் நாளை அல்லது நாளை மறுநாள் பிளாஸ்மா எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related posts

Leave a Comment