டெஸ்லா நிறுவனர் குழந்தைக்கு சூட்டப்பட்டுள்ள விசித்திரமான பெயர்

டெஸ்லா எலெக்ட்ரிக் கார், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் தொழிலதிபர் எலான் மஸ்க். அமெரிக்காவின் மிகப்பெரிய செல்வந்தர்களில் ஒருவரான இவருக்கும் இவரது மனைவி கிரிம்ஸுக்கும் பிறந்த ஆண் குழந்தைக்கு X Æ A-12 என்று பெயர் சூட்டி உள்ளனர். கணித சூத்திரம் போல, இது என்ன பெயர் என அனைவரும் வியந்தனர். மகனின் இந்த பெயரை மஸ்க் முன்னதாக டுவிட்டரில் வெளியிட்டிருந்தார்.

எலான் மஸ்குக்கு லாஸ் எஞ்சலிஸ், பெல் ஏர், சன் பிரான்சிஸ்கோ உள்ளிட்ட இடங்களில் பல வீடுகள் உள்ளன. தற்போது இவரும் இவரது மனைவியும் கலிப்போர்னியா இல்லத்தில் வசிக்கின்றனர். கலிபோர்னியா மாகாண சட்டப்படி அங்குள்ள குடிமக்கள் தங்கள் குழந்தைகளுக்கு ஆங்கில எழுத்துக்களில் மட்டுமே பெயர் வைக்கவேண்டும். கணித குறியீடுகள், கணித யூனிட்டுகள், எண்களை, குழந்தையின் பெயர்களில் பயன்படுத்த அனுமதி கிடையாது. ஆக, இந்த வித்தியாசமான பெயரை அங்கீகரித்து பிறப்புச் சான்றிதழில் பதிவிட முடியாது என கலிபோர்னியா மாகாண அரசு தெரிவித்துள்ளது.இச்சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.

அதெல்லாம் சரி…இந்த வித்தியாசமான பெயருக்கு மஸ்க் டுவிட்டரில் என்ன விளக்கம் கொடுத்துள்ளார் எனப் பார்ப்போமா?

X Æ A-12


X என்பது கணிதத்தில் ‘அன்னோன் வேரியபிள்’ எனப்படும் அறியப்படாத மாறும் பின்னம்
Æ என்பது செயற்கை நுண்ணறிவைக் குறிக்கும் சிம்பல்
A-12 என்ற அமெரிக்க போர் விமானம் மஸ்க் தம்பதிகளுக்கு பிடித்த ஒன்று. அதனால் இதையும் மகனின் பெயரோடு இணைத்துவிட்டனர்.
மேலும் ‘ஆர்செங்கல்’ எனத் துவங்கும் பாடல் மஸ்க் மனைவி கிரீம்ஸுக்கு மிகவும் பிடிக்குமாம். அதனால் அதன் முதல் ஆங்கில எழுத்தான A-வை குறிக்கவும் இது பயன்படுமாம்..! மஸ்குக்கு ஏற்கனவே ஐந்து குழந்தைகள் உள்ளதும், X Æ A-12, ஆறாவது மகன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

Leave a Comment