மீண்டும் குடும்பத்துடன் டான்ஸ் : அசத்தும் வார்னர்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வீரரான டேவிட் வார்னர், இந்த கொரானோ ஊரடங்கு காலத்தில் அவருடைய ரசிகர்களையும், ஐபிஎல் போட்டியில் அவர் சார்ந்த ஹைதராபாத் அணி ரசிகர்களையும் நிறையவே மகிழ்வித்து வருகிறார்.

இரண்டு வாரங்களுக்கு முன்பு அல்லு அர்ஜுன் நடித்த ‘அலா வைகுந்தபுரம்லோ’ படத்தில் இடம் பெற்ற சூப்பர் ஹிட் பாடலான ‘புட்ட பொம்மா’ பாடலுக்கு மனைவி, மகளுடன் இணைந்து நடனமாடி ஒரு டிக்டாக் வீடியோவை வெளியிட்டார். இன்ஸ்டாகிராமில் மட்டும் அந்த வீடியோவை இதுவரையில் 42 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.

அதற்கடுத்து நேற்று மீண்டும் ஒரு டிக்டாக் வீடியோவை வெளியிட்டுள்ளார். மீண்டும் ‘அலா வைகுந்தபுரம்லோ’ படத்தில் இடம் பெற்ற ‘ராமுலோ ராமுலா’ பாடலுக்கு தனது மனைவி, மகளுடன் நடனமாடியுள்ளார். அதற்குள் இந்தப் பாடலை 13 லட்சம் பேர் பார்த்துவிட்டனர்.

இந்த வீடியோவைப் பார்த்த அல்லு அர்ஜுன், “மீண்டும் ஒரு பெரிய ஆச்சரியம் சார், கலக்கிட்டீங்க,” என பதிலளித்துள்ளார்.

Related posts

Leave a Comment