விஜய்யைப் பார்த்து பொறாமைப்பட்ட அஜித்

தமிழ் சினிமாவில் தற்போது கடுமையான போட்டியாளர்கள் என்றால் அது விஜய், அஜித் மட்டும்தான். இருவருடைய படங்களுக்கு எப்படிப்பட்ட வரவேற்பு, எப்படிப்பட்ட வசூல் கிடைக்கிறது என்பதுதான் திரையுலகில் முக்கியமான போட்டியாக உள்ளது.

சமூக வலைத்தளங்களில் கூட அவர்களது ரசிகர்கள்தான் அதிகமாக போட்டி போடுவதை விட சண்டை போட்டுக் கொள்கிறார்கள். அவர்கள் மேலும் சண்டை போட்டுக் கொள்ளும் விதமாக பின்னணிப் பாடகியும், ஆர்ஜேவுமான சுசித்ரா சமீபத்திய பேட்டி ஒன்றில் ஒரு தகவலைச் சொல்லியிருக்கிறார்.

‘சுசி லீக்ஸ்’ என சில வருடங்களுக்கு முன்பு பரபரப்பை ஏற்படுத்திய சுசித்ரா, தற்போது மீண்டும் ஆர்ஜே பணிக்குத் திரும்பியுள்ளார். அவர் பேட்டி கொடுத்ததாக ஒரு செய்தி தற்போது பரவி வருகிறது.

சில வருடங்களுக்கு முன்பு ஒரு பார்ட்டியில் அஜித்தை சந்தித்தாராம் சுசித்ரா. ‘வேட்டைக்காரன்’ படம் வெளிவந்த அந்த சமயத்தில் அப்படத்தில் இடம்பெற்ற சுசித்ரா பாடிய ‘ஒரு சின்னத் தாமரை’ பாடலை அஜித் பாராட்டினாராம். அதோடு, விஜய்க்கு பல நல்ல பாடல்கள் கிடைப்பதைப் பார்த்து பொறாமைப்படுவதாக அஜித் கூறினார் என்று சுசித்ரா தெரிவித்துள்ளார்.

அதுவும் உண்மைதான். அஜித் நடித்து வெளிவந்த படங்களின் பாடல்கள் ஹிட்டானதை விட, விஜய் நடித்து வெளிவந்த படங்களில் பல பாடல்கள் சூப்பர் ஹிட்டாகவே ஆகியிருக்கின்றன. அந்த விதத்தில் அஜித் உண்மையைத்தான் பேசியிருக்கிறார்.

Related posts

Leave a Comment