பலாலி விமானப்படையின் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த 98 பேர் விடுவிப்பு!!

பலாலி விமானப்படை  தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த 98 பேர் சொந்த இடங்களுக்கு இன்று அனுப்பி வைக்கப்பட்டனர்.


 கொழும்பு பண்டாரநாயக்க மாவத்தையை சேர்ந்த  98 பேரே இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டனர்.


இவர்களில் 6 மாத குழந்தை ஒருவர் உட்பட 10 சிறுவரும் உள்ளடங்குகின்றனர்

22 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என PCR பரிசோதனையில் கண்டறியப்பட்டதையடுத்து   சான்றிதழ்கள் வழங்கப்பட்டு இன்று காலையில் அவர்கள் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Related posts

Leave a Comment