கதைகளை எழுதித்தள்ளும் இயக்குனர்கள்

கொரானோ ஊரடங்கு எத்தனையோ பேருக்கு வலிகளைக் கொடுத்தாலும் சிலருக்கு வழிகளைக் காட்டியுள்ளது. சினிமா இயக்குனர்கள் பலரும் இந்த கொரானோ ஊரடங்கு காலத்தில் நான்கைந்து கதைகள் எழுதிவிட்டேன், பத்துப் பதினைந்து கதைகள் எழுதிவிட்டேன் என்று சொல்லி வருகிறார்கள்.

அப்படியென்றால் அடுத்த பத்து, பதினைந்து வருடங்களுக்கு அவர்களுக்குக் கதைப் பஞ்சம் இருக்காது. அந்தக் கதைகளை வைத்து அவர்கள் படங்களை இயக்கிய பிறகு படத்தில் எங்கே கதை இருக்கிறது என்று யாரும் கேட்கக் கூடாது.

அதே சமயம், இந்த கொரானோ ஊரடங்கு காலத்தில்தான் அமேசான், நெட்பிளிக்ஸ், ஹாட்ஸ்டார், யு டியூப் என உலகப் படங்கள் பலவற்றையும் பல இயக்குனர்கள் பார்த்துத் தள்ளி இருக்கிறார்கள். அதே போல சினிமா ரசிகர்கள் பலரும் அந்தப் படங்களைப் பார்த்து வருகிறார்கள்.

எனவே, எதிர்காலப் படங்களில் இடம் பெற உள்ள கதைகள் ஒரிஜனல் கதைகளா அல்லது சுட்ட கதைகளா என்பது எளிதில் தெரிய வரும். இருந்தாலும் ஒரிஜனல் கதைகளையே எழுதியிருப்பார்கள் என்று நம்புவோமாக.

Related posts

Leave a Comment