இயல்பு நிலைக்கு திரும்பியது ஜப்பான்

ஜப்பானில் 8 மாகாணங்களை விட பிற பகுதிகளில் கட்டுப்பாடுகள் விலக்கப்பட்டதையடுத்து, மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.

ஆசிய நாடான ஜப்பானில், ‘கொரோனா’ வைரஸ் தாக்கம் சற்று குறைந்துள்ளது. இந்நிலையில், அங்குள்ள, 47 மாகாணங்களில், டோக்கியோ, ஒசாகா உட்பட எட்டு மாகாணங்களைத் தவிர, மற்ற மாகாணங்களில் கட்டுப்பாடுகள் விலக்கிக் கொள்ளப்பட்டன.

சுறுசுறுப்புக்கு பெயர் பெற்ற ஜப்பானியர்கள், மீண்டும் இயல்பு நிலைக்கு வேகமாக திரும்பியுள்ளனர். திட்டமிட்டதை விட, இரண்டு வாரங்களுக்கு முன், கட்டுப்பாடுகள் விலக்கிக் கொள்ளப்பட்டதை எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

ஜப்பானில் 16 ஆயிரத்து 367 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 768 பேர் இதுவரை பலியாகி உள்ளனர். 11 ஆயித்து 564 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர்.

Related posts

Leave a Comment