ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை பயன்படுத்த உலக சுகாதார அமைப்பு அனுமதி

ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை மருத்துவ பரிசோதனைகளுக்கு பயன்படுத்தலாம் உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.

உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸ் தொற்றிக்கு சிகிச்சை அளிக்க மலேரிய தடுப்பு மருந்தான ஹைட்ராக்ஸின் குளோரோகுயின் மருந்து சீனா, இத்தாலி, ஸ்பெயின், பிரிட்டன் ,பிரன்ஸ் ,அமெரிக்கா நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வந்தது.இந்த மருந்து பாதுகாப்பானது அல்ல பயன்படுத்துபவர்களுக்கு இதய நோய் வாய்ப்பு உள்ளது என கூறி உலக சுகாதார அமைப்பு இந்த மருந்தின் பயன்பாட்டை திடீரென நிறுத்தி வைப்பதாக அதன் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கடந்த மே.25ம் தேதி அறிவித்தார்.

இந்நிலையில் இந்த மருந்தை மருத்துவ பரிசோதனைக்கு பயன்படுத்தலாம் என அறிவித்துள்ளார்.

இது குறித்து உலக சுகாதார அமைப்பின் நோய் தொற்று பாதுகாப்பு கண்காணிப்புக்குழு வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்த மருந்தை பயன்படுத்தியதால் உயிரிழப்புகள் எதுவுமில்லை என்ற ஆய்வுத்தகவல் தெரிவிக்கப்பட்டதன் அடிப்படையில் ஹைட்ராக்ஸி குரோரோகுயின் மருந்தை பயன்படுத்தலாம் பரிந்துரைக்கப்பட்டுளளது. இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Related posts

Leave a Comment