ரஷ்யாவில் கொரோனா பாதிப்பு 5 லட்சத்தை கடந்தது!!

ரஷ்யாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 5,02,436 ஆக அதிகரித்துள்ளது.

“ ரஷ்யா கடந்த 24 மணி நேரத்தில் 8,779 பேருக்கு கரோனா உறுதிப்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து ரஷ்யாவில் கரோனா பாதிப்பு ஏற்பட்டவர்கள் எண்ணிக்கை 5,02,436 ஆக அதிகரித்துள்ளது. மாஸ்கோவில் அதிகபட்சமாக 2லட்சம் பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ரஷ்யாவில் கொரோனாவுக்கு 6 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.

இதுவரை ஒரு கோடிக்கும் அதிகமானவர்களுக்கு கொரோனாவுக்கான பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.ரஷ்யாவில் கொரோனா தொற்று ஒருபக்கம் அதிகரிக்கும் நேரத்தில் மாஸ்கோவில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது. ரஷ்யாவில் கொரோனா தொற்று அதிகரித்து வந்தாலும் அங்கு குணமடைந்தவர்கள் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளது .

Related posts

Leave a Comment