இந்தியாவும் சீனாவும் பிரச்னைகளை பேசி தீர்க்கும்: ரஷ்யா நம்பிக்கை

‘இந்தியாவும், சீனாவும், எல்லைப் பிரச்னைகளை பேசி தீர்த்துக் கொள்ளும்’ என, ரஷ்யா நம்பிக்கை தெரிவித்துஉள்ளது.

ரஷ்ய அதிபரின் செய்தி தொடர்பாளர், டிமிட்ரி பேஸ்கோவ் கூறியதாவது:இந்திய – சீன எல்லையில் நிலவும் நிலைமையை, தீவிரமாக கண்காணித்து வருகிறோம். நிலைமை மிகவும் பதற்றமாக உள்ளன.ஆனால், இரு நாடுகளும், எல்லையில் பதற்றத்தை குறைத்து, அமைதியை ஏற்படுத்தும் என, நம்புகிறோம்.

இந்திய – சீன எல்லையில் அமைதி நிலவுவது, இரு நாடுகளுக்கு மட்டுமின்றி, கிழக்காசிய பகுதிக்கே நல்லதாக அமையும். இந்தியாவும், சீனாவும், ரஷ்யாவின் நெருங்கிய நட்பு நாடுகள்.இரு நாடுகள் நலனிலும், ரஷ்யா அக்கறை கொண்டுள்ளது. இருநாடுகளும், பதற்றத்தை குறைக்க முயற்சித்து வருவதை, ரஷ்யா வரவேற்கிறது. இவ்வாறு, அவர் கூறினார்.

Related posts

Leave a Comment