யாழ்ப்பாணத்தில் ஊரடங்கு வேளையில் ஆங்காங்கு வீதிகளில் உண்ண உணவுவின்றிஅலைந்து திரிந்த நன்றியுள்ள பிராணி நாய்களுக்கு சமைத்த உணவை இளைஞர்கள் இட்டார்கள்.
சங்கானை இந்து இளைஞர் மன்றத்தின் இளைஞர்களின் செயல் பாராட்டப்பட வேண்டியது.நாட்டில் ஊரடங்கு சட்டம் காரணமாக அனைத்தும் முடங்கி உள்ள நிலையில் பிராணிகளுக்கு இளைஞர்கள் உணவு வழங்கியமை நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.