இலங்கையை எச்சரித்துள்ள ஐ.நா சபையின் உலக உணவு செயற்திட்டம்..!!

இலங்கையில் மந்தபோசனை நிலை வெகுவாக அதிகரித்து வருவதாகவும் இது நாட்டின் மேம்பாட்டுக்கு அச்சுறுத்தலாக அமையும் என்றும் ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாயத்துக்கான அமைப்பும் ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவு செயற்திட்டமும் எச்சரித்திருக்கின்றன.

கொவிட் – 19 கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக பலரும் தமது வாழ்வாதாரத்தை இழந்துள்ள நிலையில், இதனால் மந்தபோசணை நிலைமை மேலும் தீவிரமடைவதைத் தடுக்கும் நோக்கில் முறையானதொரு உணவு உற்பத்தி மற்றும் விநியோக செயற்திட்டத்தை முன்னெடுப்பதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றும் மேற்படி அமைப்புக்கள் அறைகூவல் விடுத்திருக்கின்றன.

Related posts

Leave a Comment