உள்ளுராட்சி சபைகளின் நிதியில் நிவாரணங்கள் வழங்க முடியாது – ஆளுனர் சார்ள்ஸ்

வடக்கு மாகாண சபைக்கு உட்பட்ட சகல அமைச்சுக்கள் , திணைக்களங்களின் பணியாளர்களின் சொந்த நிதிப் பங்களிப்புடன் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களினதும் நிதிப்பங்களிப்புடன் நிவாரண உதவியை முன்னெடுக்கும் அதேநேரம் உள்ளூராட்சி மன்றங்கள் அரச நிதியை பயன்படுத்த அனுமதிப்பதில்லை என வடக்கு மாகாண ஆளுநர் தலமையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாணத்தில் பணியாற்றும் சகல அரச ஊழியர்களிலும் நிறைவேற்று அதிகாரிகள் ஆயிரத்து 500 ரூபாவும் இடை நிலை உத்தியோகத்தர்கள் ஆயிரம் ரூபாவும் தொழிலாளர்கள் 500 ரூபாவும் நிதிப் பங்களிக்கும் அதேநேரம் வடக்கு மாகாணத்தில் உள்ள 2 ஆயிரத்து 224 உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களினதும் சொந்தப் பங்களிப்பிலான பணங்களில் பிரதேச செயலகங்கள் உறுதி செய்யும பட்டியலிற்கு நிவாரண வழங்கலை மேற்கொள்ளலாம்.

இதேநேரம் பொருளாக வழங்குவதா அல்லது நிதியாக வழங்குவதா என்பதனை மாவட்டச் செயலாளர்களுடன் உரையாடி தீர்மானிக்க முடியும்.

இதேநேரம் வடக்கின் பல உள்ளூராட்சி சபைகள் சபை நிதியில் இருந்து நிவாரண விநியோகம் செய்யகோரியிருந்த அனுமதிகள் வழங்க முடியாது.்அவர்கள் அணர்த்த நேரத்தில் சபையினால் ஆற்றும் பணிகளை சபை நிதியில் இருந்து திறம்பட ஆற்ற முடியும். என தீர.மானித்துள்ளனர்.

Related posts

Leave a Comment