35,000 பேர் அவரவர் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டனர்..!!

கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டோருடன் தொடர்புகளைப் பேணிய முதலாவது தொடர்பாளர்களை வீடுகளிலேயே தனிமைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதில் எவ்வித சிக்கலும் கிடையாது.

ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவுகளிலும் நியமிக்கப்பட்டுள்ள மக்கள் பொலிஸ் அதிகாரிகள் ஊடாக இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் தொடர்பான  கண்காணிப்பு சேவைகளைப் பெற்றுக் கொள்ள எதிர்பார்த்துள்ளதாக பிரதி பொலிஸ்மா அதிபர் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ,
தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களை கண்காணிப்பது சுகாதாரத் துறையினருக்கும் பொலிஸாருக்கும் புதிய விடயமல்ல. இன்றுவரை சுமார் 35 000 பேர் அவரவர் வீடுகளிலேயே சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

அவர்கள் அனைவரும் தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். மார்ச் மாதம் தொடக்கம் தற்போது வரை ஒரு இலட்சத்து 85,000க்கும் அதிகமானோர்  வெவ்வேறு சந்தர்ப்பங்களிலும் தனிமைப்படுத்தப்பட்டனர் என்றும் அவர் தெரிவித்தார்.

Related posts

Leave a Comment