ஹிஸ்புல்லாவின் பல்கலைக்கழகம் கொரோனா மருத்துவ விடுதியாக மாற்றம்..!!

மட்டக்களப்பு ஷரியா பல்கலைக்கழகம் என கூறப்படும் முன்னாள் எம்.பி ஹிஸ்புல்லாவின் பல்கலைக்கழகம் கொரோனா நோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்கும் நிலையமாக மாற்றப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆலோசனை பேரில் இந்த நடவடிக்கை இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக பொலன்னறுவை வைத்தியசாலை பணிப்பாளர் மருத்துவர் சம்பத் இந்திக்க குமார தெரிவித்தார்.

இதன்படி ஷரியா பல்கலைக்கழகத்தில் சுமார் 1200 நோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வசதிகள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Related posts

Leave a Comment