மூன்று மாதக் குழந்தைக்கும் கொரோனா தொற்று..!!

மத்துகம – வலல்லாவிட்ட பிரதேசத்தில் 03 மாதக் குழந்தைக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வலல்லாவிட்ட நிர்வாக பொதுசுகாதார அதிகாரி திலகரத்ன அத்துகோரள இதனைத் தெரிவித்தார்.

வலல்லாவிட்ட மாகலந்தாவ பிரதேசத்தைச் சேர்ந்த குழந்தைக்கே இவ்வாறு தொற்று ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

தற்சமயம் குறித்த குழந்தையும், ஏற்கனவே தொற்று உறுதிசெய்யப்பட்ட குழந்தையின் தாயும் கொழும்பு ஐ.டி.எச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை வலல்லாவிட்ட பிரதேசம் முடக்கப்பட்டிருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

Related posts

Leave a Comment