புத்தளத்தில் தனிமைப்படுத்தலில் இருந்த பெண் மரணம் – கொரோனா என சந்தேகம்..!!

புத்தளம் – முந்தல் பிரதேசத்தில் வீட்டில் தனிமைப்படுத்தலில் இருந்த வயோதிபப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அவரது உடல் நேற்று மாலை தகனம் செய்யப்பட்டுள்ளது.

76 வயதுடைய குறித்த பெண், தனது வீட்டில் இதர அங்கத்தவர்களுடன் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருந்தார்.

முதலில் செய்யப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் அவருக்கு தொற்று இருக்கவில்லை. எனினும் அந்த வீட்டிலிருந்த ஏனையவர்களின் பரிசோதனை முடிவுகள் வெளிவரவுள்ள நிலையிலேயே குறித்த பெண் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

Leave a Comment