கொரோனா சந்தேகத்தில் மருத்துவமனையிலிருந்து தப்பிச்சென்ற ஜோடி; வீட்டில் வைத்து மடக்கி பிடிக்கப்பட்டனர்..!!

கொரோனா வைரஸ் சந்தேகத்தில் இரத்தினபுரி – இறக்குவான வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட தம்பதியினர் நேற்று தப்பியோடிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

கஹவத்த – வெல்லந்தர பகுதியைச் சேர்ந்த பெண் கொரோனா வைரஸ் சந்தேகத்தில் கடந்த 27ஆம் திகதி கஹவத்த தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் அவருடைய கணவரும் அங்கேயே அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் அவர்கள் இறக்குவான வைத்தியசாலைக்கு மேலதிக பரிசோதனைகளுக்காக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதனிடையே வைத்தியசாலை நிர்வாகத்திற்கு தகவல் கூறாமல் இவ்விருவரும் தப்பிச்சென்று அட்டகலன்பன்ன பனாவல பகுதியிலுள்ள தங்களது வீட்டிற்கு சென்றுள்ளனர்.

இதனையடுத்து சுகாதார அதிகாரிகள் மற்றும் பொலிஸார் இணைந்து இவர்கள் குறித்த தகவல்களை திரட்டியதோடு அவர்களையும் கண்டுபிடித்து அவர்களுடைய வீட்டிலேயே தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

Related posts

Leave a Comment