தமிழ் மன்னனை எல்.ரீ.ரீ ஆக்கிய கிளிநொச்சி பொலிஸார்; தீபச் சுடர், மாலைகளை சப்பாத்து கால்களால் மிதித்தும் அடாவடி..!!

கிளிநொச்சியில் இன்று மன்னர் ஒருவரின் சிலைக்கு மாலையிட்டு தீபம் ஏற்ற பிராந்திய சுகாதார நிலையத்தில் அனுமதி பெற்று கரைச்சி பிரதேச சபை தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் சென்ற போது பொலிஸார் குறித்த நிகழ்விற்கு அனுமதிக்காததால் அங்கு முறுகல் நிலை ஏற்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

பிரதேச சபை உறுப்பினர்கள் மன்னருக்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்துவதற்கு சென்றிருந்தனர். இதன்போது அங்கு வருகை தந்திருந்த போலீசார் அதற்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்தனர்.

இதன்போது நிகழ்வில் கலந்துகொள்ள வந்த பிரதேச சபை உறுப்பினர்கள் நாம் தமிழ் மன்னருக்கே அஞ்சலி செலுத்துகிறோம். விடுதலைப்புலிகளுக்கு அஞ்சலி செலுத்தவில்லை. போரில் உயிரிழந்த மாவீரர்களை அஞ்சலிக்கவில்லை என்பதை விளக்கினார்.

எனினும் அதனை ஏற்க மறுத்த போலீசார் தமிழ் மன்னன் அல்ல நீங்கள் விடுதலைப் புலிகளை மீள உருவாக்கும் செயலாகவே நாங்கள் பார்க்கிறோம் என்று கூறினர்.அது மட்டுமன்றி போலீசார் நிகழ்வினை நடாத்துவதற்கு அனுமதி மறுத்தனர்.

எனினும் எதிர்ப்பினை மீறி அஞ்சலி செலுத்த முற்பட்டபோது மாலைகளை பிடுங்கி எறிந்த போலீசார் சுடர் ஏற்றிய தீபத்தினை சப்பாத்து காலால் அனைத்து கடும் அட்டகாசத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

Leave a Comment