அரியாலையில் கள்ள மண் அகழ்பவர்களின் தாக்குதலில் 4 விசேட அதிரடிப்படையினர் படுகாயம்..!!

யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் கள்ள மண் அகழ்வில் ஈடுபடுபவர்களை பிடிப்பதற்கு சென்ற விசேட அதிரடிப்படையினர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 4 பேர் காயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

அரியாலைப் பகுதியில் சட்டவிரோத மண் அகழ்வு படுவதாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய சம்பவ இடத்திற்கு விசேட அதிரடிப்படையினர் சென்றுள்ளனர்.

இதன்போது கள்ள மண் அகழ்வில் ஈடுபடுபவர்களுக்கு விசேட அதிரடிப்படையினர் க்கும் இடையில் மோதல் இடம்பெற்றுள்ளது.

இதில் 4 பேர் காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Related posts

Leave a Comment