பசில் ராஜபக்சவை நாடாளுமன்ற உறுப்பினராக அறிவித்து விசேட வர்த்தமானி வெளியீடு..!!

ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக பசில் ராஜபக்ஷவை அறிவித்து விசேட வர்த்தமானி வெளியாகியுள்ளது.

நேற்றைய தினம் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொடு பதவி விலகியதைத் தொடர்ந்து, குறித்த நாடாளுமன்ற ஆசனத்திற்கு பசில் ராஜபக்ஷவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டது.

இந்த நிலையில், பசில் ராஜபக்ஷவின் பெயரை தேர்தல்கள் ஆணைக்குழு ஏற்றுக்கொண்டதை அடுத்து, வர்த்தமானியில் அவரது பெயர் இன்று (07) வர்த்தமானி அறிவித்தல் ஊடாக வெளியிடப்பட்டுள்ளது.

இந்த விசேட வர்த்தமானி அறிவித்தலுக்கமைய பசில் ராஜபக்ஷ நாடாளுமன்ற உறுப்பினராக அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.

Related posts

Leave a Comment