யாழ்.நகரில் பழ வியாபாரி மீது வாள் வெட்டு

யாழ் பேருந்து நிலையத்திற்கு அண்மையில் பட்டப்பகலில் ஒருவர் மீது வாள் வெட்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்திற்கு அண்மையில் பழ வியாபாரத்தில் ஈடுபடும் வியாபாரி ஒருவருக்கும் பிரிதொரு நபருக்கும் இடையில் காசு கொடுக்கல் வாங்கல் பிரச்சனை இருந்தது.

இந்நிலையில் இரு தரப்புக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் யழ வியாபாரி மீது வாள் வெட்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

இந்த தாக்குதலில் கழுத்து மற்றும் முதுகுப் பகுதியில் படுகாயமடைந்த வியாபாரி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

Leave a Comment