பாதுகாப்பு தரப்பினரின் முற்றுகையில் இருந்த தாவடி கிராமம் நாளை காலை 6 மணிக்கு மீள்கிறது

யாழ்ப்பாணத்தில் முதலாவதாக அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளியின் கிராமமான தாவடி கிராமம் நாளை காலை 6 மணிக்கு பாதுகாப்புத் தரப்பினரின் முற்றுகையிலிருந்து விலக்கிக் கொள்ளப்படவுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ்ப்பாணத்தில் முதலாவது கொரோனா நோயாளியாக இனம்காண பட்டவரின் கிராமம் தாவடி ஆகும்.இந்த கிராமம் சில நாட்களாக பாதுகாப்புத் தரப்பினரின் முற்றுகைக்குள் வைக்கப்பட்டுள்ளதுடன் கிராமத்தில் இருந்து வெளியேற மற்றும் உள்நுழைய தடைவிதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அங்கு வசிப்பவர்களின் சிலருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது எனினும் அவர்களுக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்படவில்லை அண்மையில் வடக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் முடக்கப்பட்டுள்ள கிராமம் வழமையான செயற்பாட்டிற்கு நாளை திங்கட்கிழமை அனுமதிக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்

இக்கிராமம் நாளை காலையிலிருந்து வழமையான செயற்பாடுகளுக்கு அனுமதிக்கப்பட உள்ளது இதேவேளை நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

Leave a Comment