தேர்தலா? மக்கள் பாதுகாப்பு முக்கியமா?அரசே தீர்மானிக்க வேண்டும் – சுரேஸ்பிரேமச்சந்திரன்

இலங்கை அரசாங்கம் சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு இருந்த காலத்திலேயே இலங்கை பாராளுமன்றத்தை கலைத்த்து.இது உலக நாடுகளுக்கும் பரவலாம
என எதிர்வு கூறப்பட்டிருந்த்து.எனினும் அரசு அவசரப்பட்டு பாராளுமன்றத்தை கலைத்த்து.

தேர்தலும் அறிவிக்கப்பட்டு அவசரஅவசரமாக வேட்பு மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டது எனினும் கொரோனா வைரஸ் உலக அளவில் பாரிய தாக்கத்தை செலுத்தியது.அந்த தாக்கம் இலங்கையிலும் செலுத்தியது.இதனால் தேர்தலை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.எனினும் இலங்கை அரசாங்கம் தேர்தலை நடத்துவதற்கு பல முனைகளிலும் முயற்சிகளை எடுத்து வருகின்றது.எனினும் தற்போது உள்ள சூழ்நிலையில் மக்களின் பாதுகாப்பை முக்கியமே தவிர தேர்தல் அல்ல இதனை அரசாங்கம் யோசிக்கவேண்டும்

உலக அளவில் வைரஸின் தாக்கம் 20 லட்சத்தை தாண்டியுள்ளது மேலும் ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேர் வரையிலான உயிரிழந்துள்ளனர் இலங்கையிலும் பாதிப்பு உள்ளது.எனவே இந்த நேரத்தில் தேர்தல் முக்கியமல்ல மக்களைப் பாதுகாக்க வேண்டும் வைத்தியர்கள் சுகாதார துறையினர் அறிவுரைகளைக் கேட்டு நடந்து கொள்ள வேண்டும்.எனவே மக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.தேர்தல் முக்கியமல்ல என்றார்.

Related posts

Leave a Comment