மேல் மாகாணம் முழுவதும் நாளை நள்ளிரவு முதல் திங்கட்கிழமை அதிகாலை 5 மணி வரை ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
Read Moreஊரடங்கு தளர்த்தும் நாட்கள் அறிவிப்பு
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதிகளில் பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளுக்காக இரு நாட்கள் ஊரடங்கு தளர்த்தப்படவுள்ளது எனக் கொரோனாத் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். அதற்கமைய கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளிலும், கொழும்பு மற்றும் குருநாகல் மாவட்டங்களில் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அத்தியாவசியப் பொருட்களை விற்பனை செய்யும் மருந்தகங்கள் மற்றும் கடைகள் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை, வர்த்தக நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் சுகாதா வழிகாட்டுதல்களைத் தவறாமல் பின்பற்றி தமது கொள்வனவு நடவடிக்கைகளில் ஈடுபட முடியும். சுகாதார விதிமுறைகளை மீறுபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்று பொலிஸார் அறிவித்துள்ளனர்.
Read Moreமேலும் 164 பேருக்கு கொரோனா; 156 பேர் சமூகத்தில் இருந்தும், 8 பேர் தனிமைப்படுத்தல் முகாமில் இருந்தும் – இராணுவ தளபதி
நாட்டில் மேலும் 164 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார். இவர்களில் 156 பேர் சமூகத்தில் இருந்தும், 8 பேர் தனிமைப்படுத்தல் முகாமில் இருந்தும் ஏனையவர்கள் பேலியகொட கொத்தனியுடன் தொடர்புடையவர்கள் எனவும் அவர் கூறினார்.
Read Moreமேலும் மூன்று பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்கு அமுல்
மொரட்டுவை, பாணந்துறை, ஹோமாகமை பொலிஸ் பகுதிகளில் உடன் அமுலாகும் வகையில் ஊரடங்கு அமுலானது.
Read Moreகொரோனாப் பரவல் அச்சம் காரணமாக வெளிவாரிப் பரீட்சைகள் ஒத்திவைப்பு!
கொரோனாப் பெருந்தொற்று அச்சத்தினால் நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமைகளைக் கருத்தில் கொண்டு யாழ். பல்கலைக்கழக வெளிளிவாரிப் பரீட்சைகள் அனைத்தும் மறு அறிவித்தல் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தரின் ஊடகப் பிரிவு சற்று முன்னர் அனுப்பி வைத்துள்ள செய்திக்குறிப்பில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தினால் நடாத்தப்படும் வணிகமாணி (வெளிவாரி) மூன்றாம் வருட, இரண்டாம் அரையாண்டுக்கான பரீட்சைகள் எதிர்வரும் 31 ஆம் திகதி சனிக்கிழமை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டதுடன், அதற்கான அனுமதி அட்டைகள் வழங்கும் பணியும் இடம்பெற்றது. இந்த நிலையில், நாட்டின் பல பாகங்களில் இருந்தும் பரீட்சார்த்திகள் பலர், மாவட்டங்களைக் கடந்து வர முடியாத நிலை காணப்படுகின்றமை பற்றி ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருந்தமை துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜாவின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டதை அடுத்து, நிலைமைகள் சீராகும் வரை பரீட்சைகளை ஒத்திவைக்குமாறு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக…
Read Moreஇலங்கை வந்தடைந்தார் அமெரிக்க இராஜாங்க செயலாளர்
அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ளார். இவரது விஜயத்தில் ஜனாதிபதி, பிரதமர், வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
Read More35,000 பேர் அவரவர் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டனர்..!!
கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டோருடன் தொடர்புகளைப் பேணிய முதலாவது தொடர்பாளர்களை வீடுகளிலேயே தனிமைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதில் எவ்வித சிக்கலும் கிடையாது. ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவுகளிலும் நியமிக்கப்பட்டுள்ள மக்கள் பொலிஸ் அதிகாரிகள் ஊடாக இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் தொடர்பான கண்காணிப்பு சேவைகளைப் பெற்றுக் கொள்ள எதிர்பார்த்துள்ளதாக பிரதி பொலிஸ்மா அதிபர் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் , தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களை கண்காணிப்பது சுகாதாரத் துறையினருக்கும் பொலிஸாருக்கும் புதிய விடயமல்ல. இன்றுவரை சுமார் 35 000 பேர் அவரவர் வீடுகளிலேயே சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். மார்ச் மாதம் தொடக்கம் தற்போது வரை ஒரு இலட்சத்து 85,000க்கும் அதிகமானோர் வெவ்வேறு சந்தர்ப்பங்களிலும் தனிமைப்படுத்தப்பட்டனர் என்றும் அவர் தெரிவித்தார்.
Read Moreகொழும்பு டாம் வீதி பொலிஸ் நிலைய அதிகாரிக்கு கொரோனா; பொலிஸ் நிலையம் தற்காலிக முடக்கம்..!!
கொழும்பு டாம் வீதி பொலிஸ் நிலைய அதிகாரி ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து பொலிஸ் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. அவருடன் நெருக்கமாக பணியாற்றிய 12 அதிகாரிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
Read Moreமேலும் 293 பேருக்கு கொரோனா தொற்று..!!
கொரோனா ரைவஸினால் பாதிக்கப்பட்ட மேலும் 293 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா இதனைத் தெரிவித்தார். இவர்களில் இருவர் தனிமைப்படுத்தல் முகாமில் இருந்தவர்கள் என்பதுடன் ஏனையவர்கள் அனைவரும் திலுவப்பிட்டிய மற்றும் பேலியகொடை மீன் சந்தையில் தொற்றுடையவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
Read Moreகொழும்பில் 1000 கொரோனா நோயாளர்கள்..?
கொழும்பில் திடீரென நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனைகளில் 937 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொழும்பு மாநகர சபையின் பிரதான பொது சுகாதார அதிகாரி ருவன் விஜயமுனி இதனை தெரிவித்துள்ளார்.
Read More